Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2026 2:32 PM GMT
Mr. Raja | நன்னிலம்
#65143

அனைத்து மருந்தும் வழங்குவார்களா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பேரூராட்சிக்கு அருகில் அகர கொத்தங்குடி கிராமம் அமைந்துள்ளது இங்கே வசிக்கும் மக்கள் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு அருகிலுள்ள பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லாமல் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாவட்டகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு மாத்திரை வாங்குவதற்கு கூட வயதானவர்கள் பாவட்டக்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே அகர கொத்தங்குடி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 2:29 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#65141

குளம் தூர்வாரப்படுமா?

குளம் தூர்வாரப்படுமா?மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. தூர் வாரி குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்கினால் சுற்றுவட்டாரப்பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஒரத்தநாடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 2:27 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#65139

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கல்லணை கால்வாய் செல்கிறது. இந்த கல்லணை கால்வாய் வழியாக மதுக்கூர் சாலைக்கு செல்லும் பாதையில் தெருவிளக்கு வசதி இல்லை. தாலுகா அலுவலகத்திற்கு வருபவர்கள் மற்றும் இதன் வழியாக தான் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பொதுமக்கள் செல்கிறார்கள். இருள் சூழ்ந்து இருப்பதால் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. மேலும் அங்கு நின்று மது அருந்துகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 2:23 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#65137

மாற்று இடம் தேவை

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டையில் நவீன அரிசி ஆலை முத்துப்பேட்டை சாலையில் உள்ளது.நெல் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க வரும் லாரிகளை முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கின்றனர்.இரவில் தெரு விளக்குகளை லாரிகள் மறைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேறு இடத்தில் லாரிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பார்களா? ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 2:21 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#65134

பக்கவாட்டுத்தளம் அமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் காசாங்குளம் மேல்கரையில் பெருமாள் கோவில் வாசலில் சாலை மற்றும் குளத்தின் பக்கவாட்டுத்தளம் பழுதடைந்து வலுவிழந்து எந்த நேரமும் குளத்திற்குள் சரிந்து பெரும் விபத்து ஏற்படும் சூழல் தெரிகிறது.அந்த இடத்தில் மின் கம்பம் உள்ளது.பள்ளி,கோவில் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் புதிய பக்கவாட்டுத்தளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 12:24 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#64924

இணைப்பு சாலை சரி செய்யப்படுமா?

சாலை

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது மகிழஞ்சேரி.இந்த இடத்தில் விசலூர் மற்றும் ராராந்திமங்கலம் செல்லும் சாலை உள்ளது. மேற்கண்ட நெடுஞ்சாலையில் இணைக்கப்பட்ட இந்த சாலை, சமமாக இல்லாமல் மேடும்,பள்ளமாக உள்ளது .இதனால் இந்த இணைப்பு சாலையைக் கடப்பவர்கள் அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் , திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 12:21 PM GMT
Mr. Raja | பாபநாசம்
#64922

சேதமடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதமாக குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை இல்லை . எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பாபநாசம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 12:19 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#64921

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பின்னையூர் கிராமத்தில் உள்ள கீழக்கோட்டை பாலத்தின் அருகே சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால் ஏனோ காரணத்தால் தார்ச்சாலை அமைக்கும் பணியை பாதியில் விட்டு சென்றனர். இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை விரைந்து சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 12:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#64920

தொற்றுநோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தும் இடத்திலேயே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மூக்கை பிடித்தபடியே சென்று வருகின்றனர். பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கிய கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,. பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 1:04 PM GMT
Mr. Raja | மன்னார்குடி
#64756

சேதமடைந்த குடிநீ்ர் தொட்டி

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் அம்பேத்கர் தெருவில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது .இந்த தொட்டியில் இருந்து தான் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் மோசமாக உள்ளது. தொட்டிக்கு கீழ்பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 1:01 PM GMT
Mr. Raja | மன்னார்குடி
#64755

சேதமடைந்த சாலை

சாலை

மன்னார்குடி மேலவாசல் குமரபுரம் லட்சுமி நகரில் உள்ள சாலை கற்கள் கொட்டப்பட்டு, கரடு, முரடாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றால் டயர் பஞ்சராகிவிடுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுகம்கள், மன்னார்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 12:59 PM GMT
Mr. Raja | பாபநாசம்
#64754

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கபிஸ்தலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலை சேதமடைந்து உள்ளது . அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பாபநாசம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick