Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2022 1:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3025

மின்சார அட்டை வழங்க வேண்டும்

மற்றவை

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சார அளவு குறிக்கப்படும் அட்டை இது வரை வழங்கப்படவில்லை. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மின் கட்டணம் எவ்வளவு என்று தெரிவது இல்லை. மேலும் இறுதி நாள் எது என்று தெரிவது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் அட்டை கேட்டால் கொடுப்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், தெற்கு பொய்கை நல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:07 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3023

சீரமைக்கப்பட்ட குழாய்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகு தியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டுகுடி தண்ணீர் வீணாக தெருவில்சென்றது. இதனை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டதைத்தொடர்ந்து அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்தனர். இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:05 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3020

சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?

சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரைஇந்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:00 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3014

சேவை மையம்  பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரைஇந்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேவை மையத்தை பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 4:31 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2898

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு குருமணி நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மேலும் அங்குள்ள வாழை மரங்களை பன்றிகள் சேதப்படுத்துகின்றது. குடியிருப்பு பகுதியில் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்..கல்யாணிசுந்தர், குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 4:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2897

இடியும் நிலையில் சமுதாயக்கூடம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் ஊராட்சி மகா மாரியம்மன் கோவில் அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அகற்ற வேண்டும். மேலும் சமுதாயக்கூடத்தின் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளது. போராபத்து ஏற்படும் முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் பாலையூர் பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2879

ஆபத்தான ஒயர்கள்

ட்ரெண்டிங்

கும்பகோணம் பெரிய தம்பி நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் உயர் மின்னழுத்த மின்சாரம் செல்கின்றது. இந்த மின் கம்பியில் இருந்து இணைக்கப்பட்ட கருப்பு நிற ஒயர்கள் தரைப்பகுதியில் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஒயர்களை இழுக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய ஊழியர்கள் தரைப் பகுதியில் தொங்கியபடி உள்ள இந்த ஒயர்களை உரிய இடத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2878

தொற்றுநோய் பரவும் அபாயம்

மற்றவை

கும்பகோணம் வட்டிப் பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு புறத்தில் குடியிருப்புகளுக்கு பின்புறம் வாய்க்காலில் நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் தொற்று உருவாகும் சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக தேங்கியுள்ள இந்த கழிவு நீரால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் இந்த வாய்க்கால் உள்ள கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2876

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக மேலவீதி, தெற்குவீதி, புதிய பஸ்நிலையம், வடக்கு வீதி போன்ற இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையின் குறுக்கே மாடுகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2868

பொதுகழிவறை பயன்பாட்டுக்கு வருமா?

பொதுகழிவறை பயன்பாட்டுக்கு வருமா?கழிவுநீர்

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சானூரப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால் எந்த நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். சானூரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பொதுக்கழிவறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2867

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?சாலை

பூதலூர் மின்சார வாரிய துணை மின்நிலையம் அருகில் ஆவாரம்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள புதிய பாலத்தின் அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையை விட பாலம் சற்று மேடாக உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துகளில் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். -பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:51 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2859

தொற்றுநோய்பரவும் அபாயம்

குப்பை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் குப்பைகள்,கோழி,ஆடு ஆகிய இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ்மங்கலம் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்,குப்பைகளை அகற்றவும், சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick