Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2022 1:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3437

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேல தெருவில் கடந்த ஒரு ஆண்டாக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளில் உரசி தீ விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். சிறுவர்-சிறுமிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பிகள் செல்வதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மருங்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3436

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

நாகை நேதாஜி சாலையில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாமதமின்றி குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்தீக், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3435

அங்காடி கட்டிடம் செயல்படுமா?

அங்காடி கட்டிடம் செயல்படுமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி காரைகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்காடி கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3432

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் திருக்கண்ணபுரம்-திருவாரூர் சாலையில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் எதிரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றியமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுமக்கள், திருக்கண்ணபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:05 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3430

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதன் காரணமாக பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இதனால் பள்ளி நேரங்களில் மாடுகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுற்றித்திரியும் மாடுகளை பட்டியில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3429

விரைந்து முடிக்கப்படுமா?

விரைந்து முடிக்கப்படுமா?சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஏதோ காரணத்தால் சாலைப்பணியை பாதியில் நிறுத்தி விட்டனர்.இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:02 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3428

பூங்காக்கள் சீரமைக்கப்படுமா?

பூங்கா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி திருவேங்கடம் பிள்ளை பூங்கா, காந்தி பூங்கா, முருகன் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் பொழுதுபோக்கிற்கு இடமில்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சீர்காழி நகராட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பொதுமக்கள்,சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:29 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3276

வேகத்தடையில் வண்ணம் பூசப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் வடக்கு பெய்கைநல்லூர், மற்றும் தெற்கு பொய்கை நல்லூர் பகுதியில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடையில் வண்ணம் பூசப்படாததால் இருட்டில் வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:27 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3274

ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திட்டச்சேரி -திருமருகல் பிரதான சாலையில் பச்சான்தோப்பு அருகில் கரிக்குளம் உள்ளது.இந்த குளத்தில் ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள் புதர் போல மண்டிக்கிடக்கிறது.இதனால் குளத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், பச்சான் தோப்பு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:24 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3271

புதிய பாலம் வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் அருகே கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலை அருகே ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை பொதுமக்கள் கடப்பதற்கு வசதியாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலம் மிகவும் பழமையானது என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சிறிய பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடக்கு பொய்கைநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3270

மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி ஊராட்சி வீரபெருமாநல்லூர் காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கீழத்தெருவிற்கு செல்லும் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.மின்கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அருகில் வசிப்பவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.மேலும் வேகமாக காற்று வீசுவதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அருகில் உள்ள குடுசை வீடுகளில் தீவிபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தை உணர்ந்து உரிய ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:20 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3264

பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சி, வங்காரன்மாவடி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகரை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வங்காரன்மாவடி, பொது மக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick