Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 July 2024 7:24 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#48161

மின்கம்பத்ைத சூழ்ந்த செடி, கொடிகள்

மின்கம்பத்ைத சூழ்ந்த செடி, கொடிகள்மின்சாரம்

சேர்க்காடு-வள்ளிமலை செல்லும் சாலையில் சின்ன மேட்டூரை அடுத்த கன்னியம்மன் கோவில் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின் கம்பத்தில் பல மாதங்களாக மரக்கிளைகள், செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காடுபோல் சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும். -ஆகாஷ், திருவலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:27 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48002

தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்குமா?

தண்ணீர்

திருவண்ணாமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் சுமார் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் உள்ளன. இது, பெரும்பாலும் பவுா்ணமி நாட்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்ற நாட்களில் குடிநீர் வழங்குவதில்லை. எனவே அனைத்து நாட்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 75
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#48001

மின்கம்பம் இடமாற்றப்படுமா?

மின்கம்பம் இடமாற்றப்படுமா?மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கல்பட்டு ஊராட்சி இரும்புலி வேப்பங்கொட்டை செல்லியம்மன் கோவில் பகுதியில் கூட்டுப்பாதை செல்கிறது. அந்தச் சாலை கொளத்தூர் செல்லும் சாலை ஆகும். அந்தச் சாலை ஓரத்தில் ஒரு மின் கம்பம் உள்ளது. அது, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து நடக்கும் முன் கம்பத்தை சற்று தள்ளி நட வேண்டும். -திலகர், கல்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#48000

ஏ.டி.எம். எந்திரம் பழுது

மற்றவை

கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் ஒரு முன்னணி வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் எடுக்கும் எந்திரத்தின் டிஸ்பிளே போர்டு பழுதடைந்து விட்டதால் யாரும் பணம் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:15 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#47999

சிமெண்டு சாலை அமைப்பார்களா?

சிமெண்டு சாலை அமைப்பார்களா?சாலை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவில் எதிரே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே கோவில் எதிரே சிமெண்டு சாலை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருமலை, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:11 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#47998

பள்ளங்களில் விபத்து

பள்ளங்களில் விபத்துசாலை

வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு பகுதியில் இருந்து அப்துல்லாபுரம் கூட்ரோடு வரை காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி மெயின் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அப்துல்நாசர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47997

சுகாதார வளாகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

வாலாஜா பூங்கா எதிரில் 15-வது வார்டில் காந்திநகர் உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தது. அந்தக் கட்டிட வளாகத்தில் கழிப்பறைகளும், குளியல் அறைகளும் நன்றாக இருந்தன. கடந்தசில ஆண்டுகளாக சுகாதார வளாகத்தை மக்கள் பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வரதராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47996

கால்வாய்களில் கழிவுநீர் தேங்கும் அவலம்

கழிவுநீர்

வாலாஜாவை அடுத்த புலித்தாங்கல் கிராமம் அருகே கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் முழுவதும் மூடப்பட்டது. அந்தக் கிராமத்துக்கு உட்பட்ட புதுத்தெரு, சந்து தெரு ஆகிய தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. கழிவுநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஜேந்திரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:58 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47995

குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?

குப்பை

வாலாஜா நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள திருமண மண்டபங்களுக்கு முன்பு நடைபாதைகளிலும், அதையொட்டி உள்ள சாலைகளிலும் எச்சில் இலைகளை பகிரங்கமாக இரவிலும் பகலிலும் வீசி எறிகின்றனர். இதனால் அந்த வழியே வரும் மாடுகள், நாய்கள், பன்றிகள் எச்சில் இலைகளை சாப்பிடுகின்றன. இதனால் அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். விபத்துக்களும் நடக்கின்றன. திருமண மண்டபங்கள் முன்பு குப்பைகள், எச்சில் இலைகளை சேகரிக்க குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுமா? -ரமேஷ்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#47994

நேரடி பஸ் வசதி தேவை

போக்குவரத்து

சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் 25-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் வேலூர் சென்று வர அரக்கோணம் அல்லது சோளிங்கர் சென்று அங்கிருந்து வேலூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பரவத்தூரில் இருந்து நேரடியாக வேலூர் செல்ல பஸ் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெ.சு.மணி, சமூக ஆர்வலர், பரவத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47993

சாய்வாக இருக்கும் மின்கம்பம்

சாய்வாக இருக்கும் மின்கம்பம்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் எல்.எப்.சி. அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரே ஒரு மின்கம்பம் துரு பிடித்து, அருகில் இருக்கும் தடுப்புச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால், அந்தத் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தக் கம்பத்தை நேராக அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரேசன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47992

புதிய குப்பைத்தொட்டி தேவை

குப்பை

கந்திலி அருகே சின்ன கந்திலியில் சாலையோரம் குப்பைத்தொட்டி ஒன்று உடைந்த நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். எனவே அங்கு புதிதாக ஒரு குப்பைத் தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சம்பத், கந்திலி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick