Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Jun 2024 7:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47991

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். -ராமச்சந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47990

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூர் அருகே கோமாளிப்பட்டி கிராமத்துக்குள் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவலிங்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47989

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் புதுப்பேட்டை செல்லும் சாலையில் இருந்து அவ்வை நகர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் மீது செடிகள் சூழ்ந்துள்ளது. மற்றொரு மின்கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47988

சாய்ந்த நிலையில் குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே பெரியகரம் சுண்ணாம்பு காளை பகுதியில் குப்பைத்தொட்டி ஒன்று சாய்ந்த நிலையில் பயனற்றுக் கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதி சேர்ந்த பொதுமக்கள் குப்பைத் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அந்தக் குப்பைத் தொட்டியை முறையாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விநாயகம், பெரியகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47987

குப்பைகளுக்கு தீ வைப்பதால் மக்கள் அவதி

குப்பைகளுக்கு தீ வைப்பதால் மக்கள் அவதிகுப்பை

வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. அதன் மேல் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. அதன் அருகே சாலை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் புகை மூட்டத்தால் அவதி அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், கொணவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47986

உடைந்த மரம் அகற்றப்படுமா?

உடைந்த மரம் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் கோட்டை பூங்கா அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய அரசமரத்தின் கிளை முறிந்து பூங்காவில் விழுந்தது. அதை அப்புறப்படுத்தாமல் விட்டு விட்டதால் பூங்காவுக்கு வரும் பெரியவர்கள் அந்த மரத்தில் அமர்ந்து பொழுதைப் போக்குகின்றனர். மேலும் குழந்தைகள் அதன் மீது ஏறி விளையாடுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடை பெறுவதற்கு முன்பு உடைந்து கிடக்கும் மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பிரமணியம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:11 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47985

நடைபாதை தடுப்புக்கம்பிகள் சேதம்

நடைபாதை தடுப்புக்கம்பிகள் சேதம்சாலை

வேலூர் கோட்டை பின்பக்கமுள்ள சுற்றுச்சாலை அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைத்து, இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டது. இரும்புத்தடுப்பு உடைந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தடுப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -விசுவநாதன், கஸ்பா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47984

சாரதி மாளிகை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

சாரதி மாளிகை கட்டிடம் சீரமைக்கப்படுமா?மற்றவை

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சாரதி மாளிகை கட்டிடம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதலமடைந்து கிடக்கும் சாரதி மாளிகை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47983

உயர்கோபுர விளக்கு சரி செய்யப்படுமா?

உயர்கோபுர விளக்கு சரி செய்யப்படுமா?மின்சாரம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்கம்பத்தில் ஒரு மின்விளக்கு வெகுநாட்களாக எரியாமல் உள்ளது. முக்கியமான சந்திப்புப் பகுதி என்பதால் அங்கு ஒருபுறம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாத மின்விளக்கை சரி செய்ய வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:04 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47982

கால்வாயில் குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

கால்வாயில் குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?குப்பை

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவிலில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் தினமும் இரவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயின் ஒருபகுதி மூடும் அளவுக்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றவும், மேற்கொண்டு குப்பைக்கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜவகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47981

மனுக்கள் மீது நடவடிக்கை தேவை

மற்றவை

வேலூர் வேலப்பாடியில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து மனு கொடுக்கின்றனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். அதில் பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் மனுக்களும் காரணமின்றி ரத்து செய்யப்படுகின்றன. அதற்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை. இதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும். -சுரேஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 7:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47980

குடிநீர் வால்வை மூட வேண்டும்

குடிநீர் வால்வை மூட வேண்டும்தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி பகுதி-3 விக்னேஸ்வர் நகர் தெருவில் குடிநீர் லைன் திருப்பி விடும் வால்வில் தண்ணீர் தேங்கி உள்ளது. நகராட்சி ஊழியர்கள் அதில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எடுக்காமல் அப்படியே தண்ணீர் வால்வை திறந்து விடுகிறார்கள். இந்தத் தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்தக் குழியில் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வால்வை மூட வேண்டும். -ராஜி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 12
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick