Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 July 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48174

பேனர் வைப்போர் மீது நடவடிக்கை

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தினமும் காஞ்சீபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. ஏராளமான பயணிகளும் வந்து செல்கிறார்கள். பஸ் நிலைய பகுதியில் அனுமதி பெறாமல் சிலர் ேபனர்கள், விளம்பர பலகைகள் வைக்கின்றனர். விளம்பர பலகைகள், பேனர்களால் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. அனுமதி பெறாமல் பேனர், விளம்பர பலகைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயக்குமார், பனப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48173

நாய்கள் தொல்லை

மற்றவை

நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட கணபதிபுரம், பள்ளூர், சித்தூர், சயனபுரம், கீழ்வீதி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. அந்த நாய்களால் மக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. சிறுவர், சிறுமிகள், முதியோா்களை கடிக்க வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனியப்பன், கணபதிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48172

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் 4 வழி நுழைவுப் பாதைகளில் ஒன்றில் கூட பயணிகள், மாணவ-மாணவிகள் பஸ்சுக்காகக் காத்திருக்க பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா? -கோபி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:01 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48171

வெவ்வேறு நேரத்தை காட்டும் கெடிகாரங்கள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் மகாத்மா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் மணிக்கூண்டு உள்ளது. அதில் உள்ள கெடிகாரங்கள் வெவ்வேறு நேரத்தை காட்டுகின்றன. அந்தக் கெடிகாரங்கள் அடிக்கடி பழுதடைகிறது. அந்தக் கெடிகாரங்களை பழுது நீக்கி சரியான நேரத்தை காட்டும் வகையில் வைக்கப்படுமா? -சந்தோஷ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:54 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#48169

குடிநீர் மோட்டார் பழுது

தண்ணீர்

தேசூர் பேரூராட்சியில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெரு, பிராமணர் தெரு, வைசியர் தெரு ஆகிய தெருக்களின் சந்திப்பில் சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காகச் சிரமப்படுகின்றனர். மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கரன், தேசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:52 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48168

புதர் சூழ்ந்த குடிநீர் தொட்டி

புதர் சூழ்ந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

ராஜந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட இலுப்பந்தாங்கல் பகுதி கரிப்பூர் கூட்ரோடு பயணியர் நிழற்குடை எதிரே சிறு மின் விசை தொட்டி உள்ளது. அது, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் புல், செடி, கொடிகள், புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு மக்கள் சென்று தண்ணீர் பிடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். செடி, கொடிகள், புதர்களை அகற்றி மக்கள் தண்ணீர் பிடித்துச் ெசல்ல வழி வகை செய்ய ேவண்டும். -வினோத், ராஜந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#48167

குடிநீர் குழாய் அமைக்கும் பணி காலதாமதம்

தண்ணீர்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.2.45 லட்சத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக தெரு நடுவே குழாய் புதைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி அவதிப்படுகின்றன. கால தாமதமாக நடக்கும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -சரவணவன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:45 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#48166

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்லும்போது நாய்கள் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரன், தூசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48165

மறியல் செய்யும் மாடுகளால் இடையூறு

மறியல் செய்யும் மாடுகளால் இடையூறுசாலை

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் சாலைகளிலும், தெருக்களிலும் மறியல் செய்வது போல் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன. மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கணேஷ், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48164

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வேலூர் பலவன்சாத்து சுப்பிரமணிய ஆசிரியர் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் நடந்தது. ஆனால் அந்த இடத்தில் மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாகவே குடிநீர் வீணாக வெளியேறுவதால் அவ்வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கவேல், பலவன்சாத்து.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:30 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#48163

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

காட்பாடி காங்கேயநல்லூர் இந்திரா நகர் பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அங்குள்ள விளை நிலத்தில் இரும்பு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக நிற்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாய்வாக இருக்கும் மின் கம்பத்தை சரி செய்து நேராக நிமிர்த்தி நட வேண்டும். -கஜேந்திரன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 7:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48162

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிமற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை இருந்தது. அதன் அருகே வணிக வளாகம் கட்டியபோது பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் இதுவரையில் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அங்குள்ள சாலை சந்திப்புகளிலும், மரத்தின் நிழலிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். வயதானவர்கள் உட்கார இடம் இல்லாததால் சாலை அருகே உட்காருகின்றனர். மேலும் வெயில் தாக்கத்தினால் அவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick