Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2024 7:59 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48350

வழிகாட்டி பெயர் பலகை சேதம்

வழிகாட்டி பெயர் பலகை சேதம்மற்றவை

வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாகுளம் பகுதியில் தண்டரை செல்லும் சாலையில் உள்ள வழிகாட்டி பலகை சேதமடைந்து பாதி மட்டும் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் வழிகாட்டி பலகையில் உள்ள ஊர் பெயர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். அந்தப் பெயர் பலகையை சரி செய்ய சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.செல்வம், தளவாகுளம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 7:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#48349

வீணாக வெளியேறும் தண்ணீர்

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூர் பேரூராட்சியில் ஜின்னா தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியில் இருந்து தினமும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், தெருவில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். -அயாஸ்பாஷா, களம்பூர்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 7:51 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48348

பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி

மற்றவை

திருவண்ணாமலையில் பெரியார் சிலை அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் பயணிகள் அமர இருக்கை வசதி இல்லை. மின் விளக்கு வசதி இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையில் போதிய இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். -பி.ரேகா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 7:44 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#48347

கிடப்பில் போடப்பட்ட ரெயில் பாதை பணி

மற்றவை

திண்டிவனம்-நகரி ரெயில் பாதை பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. வந்தவாசி பகுதியில் பாலங்கள் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. பாலம் கட்டும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திண்டிவனம்-நகரி ரெயில்வே பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ப.தமிழ்வாணி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 7:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#48346

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூரில் நரியம்பேட்டை சாலையில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மாலை, இரவில் அந்த வழியாக செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்க பாய்கின்றன. நாய்கள் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகளும் நடக்கின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அக்மல்பாஷா, களம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 7:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#48345

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய்திருமணி, மதுரா மாந்தாங்கல், கெங்கம்பூண்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு உடல் நலம் பாதித்த மக்கள் சிகிச்சைக்காக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்துக்கு செல்ல வேண்டும். எனவே தமிழக அரசு மகமாய்திருமணி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்குமா? -ம.ம.பழனி, மகமாய் திருமணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 7:24 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#48344

குளம்போல் தேங்கும் மழைநீர்

குளம்போல் தேங்கும் மழைநீர்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் விநாயகர் நகர் தெருவில் மழை பெய்யும் நேரத்தில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தேங்கிய நீரில் நடந்து செல்கிறார்கள். தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:26 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48180

பாதியில் நின்ற சாலை அமைக்கும் பணி

பாதியில் நின்ற சாலை அமைக்கும் பணிசாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் அருகே ரெயில்வே மருத்துவமனை பின்புறம் ஜே.என்.ஆர். பகுதிக்கு செல்லும் சாலையில் 6 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது ஜல்லி கற்கள் போடப்பட்டு பாதியிலேயே சாலை அமைக்கும் பணி நின்று விட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணிைய தொடக்க வேண்டும். -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 27
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48179

பயனற்ற குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி கிராமத்தில் 2 குப்பைத்தொட்டி ஓரமாக வீசப்பட்டு, பயனற்ற நிலையில் கிடக்கின்றன. அந்தக் குப்பைத் தொட்டிகளுக்கு பதிலாக புதிய குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். இல்லையேல், வீசப்பட்ட குப்பைத்தொட்டிகளை எடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும். -மாதேஸ்வரன், மாடப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#48178

எரியாத மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூர் டவுன் சின்ன கம்மாவார் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -கிருஷ்ணன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48177

சரியாக மூடப்படாத பள்ளம்

சரியாக மூடப்படாத பள்ளம்சாலை

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சி நந்திபெண்டாவில் இருந்து பூம்பள்ளம் வழியாக கிட்டபையனூர் செல்லும் தார் சாலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. சாலையை சீர் செய்யவில்லை. அந்தச் சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சம்பத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், வெலக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 8:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48176

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவற்றை சில மர்மநபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்க்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick