Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2024 9:01 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#48364

உடைந்த கழிவநீர் தொட்டியின் மூடி

உடைந்த கழிவநீர் தொட்டியின் மூடிகழிவுநீர்

ஆம்பூர் டவுன் அபுகான் தெருவில் கழிவுநீர் வெளியேறும் தொட்டியின் மூடி உடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் உள்ளே விழும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த மூடியை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரஞ்சித், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48363

மின்கம்பத்தில் விளக்கு பொருத்தப்படுமா?

மின்சாரம்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு தோட்டக்காரத் தெருவில் ஒரு அம்மன் கோவில் அருகில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மின் கம்பம் உள்ளது. அதில் மின் விளக்கு இல்லை. இதனால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த மின் கம்பத்தில் பல்பு பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுப்பார்களா? -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:52 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48362

நேரடி பஸ் வசதி

போக்குவரத்து

சோளிங்கரை அடுத்த பரவத்தூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்குள்ளவர்கள் சென்னை செல்ல அரக்கோணம் சென்று அங்கிருந்து சென்னை பஸ்களில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சென்னையில் இருந்து திரும்பி அரக்கோணம் வந்தால், அங்கிருந்து பரவத்தூர் வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பரவத்தூருக்கு நேரடி பஸ் வசதியை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். -பெ.சு.மணி, சமூக ஆர்வலர், பரவத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48360

சாலையோரம் குப்பைக்கழிவுகள் வீச்சு

குப்பை

ராணிப்ேபட்டை மாவட்டம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட தேவதானம் கிராமம் தேசிய ெநடுஞ்சாலைையயொட்டி உள்ளது. அந்தக் கிராமம் அருகிலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழும், வாலாஜா பாலாறு, அணைக்கட்டு ரோடு பகுதிகளிலும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிதம்பரம், வன்னிவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:42 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48359

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

வாலாஜாபேட்டை காமராஜர் தெருவுக்கு செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மின்வாரியத்துறையினர் அகற்றி விட்டு, புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும். -சத்தியராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:40 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#48358

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

அரக்கோணம் ஸ்டேட் பாங்க் எதிரில் ரெயில் நிலையம் செல்லும் கூட்ஸ் ஷெட் ரோடு பள்ளமாகி, மழைநீர் தேங்கி, சாலை ஓரங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. சாலையோரம் சேதமான தள்ளுவண்டிகள் உள்ளன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அதே பகுதியில் சோளிங்கர் ரோடு பிரதான சாலையோரமும் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோமல்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48357

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48356

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அண்ணா சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் பழைய பஸ் நிலையத்துக்குள் வந்து பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. வாகனங்கள் செல்லும்போது மாடுகள் குறுக்கே நிற்பதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48355

சாய்ந்து கிடக்கும் பெயர் பலகை

சாய்ந்து கிடக்கும் பெயர் பலகைமற்றவை

வேலூர் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் தெரு பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் சேதம் அடைந்துள்ளன. வேலூர்-ஆரணி ரோடு ரத்னசிங் குளம் தெரு பெயர் பலகை சாய்ந்து கிடக்கிறது. அந்தப் பெயர் பலகையை சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#48354

திறந்த வெளியில் மதுபானம் குடிக்கும் அவலம்

திறந்த வெளியில் மதுபானம் குடிக்கும் அவலம்மற்றவை

குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரை, காமராஜர் பாலத்தையொட்டி, புதிதாக அமைக்கப்படும் ஒரு வழிப்பாதை பகுதியில் ஒரே இடத்தில் அரசு மதுக்கடைகள் 2 உள்ளன. ஒரு வழிப்பாதை கைப்பிடி சுவர்கள் மீது வரிசையாக அமர்ந்து பட்டப் பகலிலும், மாலை, இரவு நேரத்திலும் மதுபான பிரியர்கள் திறந்தவெளி பாராக கருதி மதுபானம் குடித்து வருகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்தோடு சென்று வருகிறார்கள். திறந்த வெளியில் மதுபானம் குடிப்பதை போலீசார் தடை செய்ய வேண்டும். -மதுசூதனன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48353

பயன்பாட்டுக்குவராத சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்குவராத சுகாதார வளாகம்மற்றவை

வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டிய நாள் முதல் இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பி.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48351

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை நகரப் பகுதியில் ஆங்காங்கே பெரும்பாலும் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பாரம் அடியில் குப்பைகள் குவியல் குவியலாக கிடக்கிறது. இந்தக் குப்பைகளால் திருவண்ணாமலையின் நகர நிலையைக் கண்டு வெளியூரில் இருந்து வரும் மக்கள், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். -அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick