Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#48533

கோவில் கோபுரத்தை சீரமைக்க வேண்டும்

மற்றவை

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளியில் சிறப்பு வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. வருடந்தோறும் இங்குள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கோபுர சிற்பங்கள் கலை நயத்துடன் உள்ளது. இந்தக் கோபுரத்தை கோவிலுடன் புதுப்பிக்க வேண்டும். இங்குள்ள தேர், தெப்பக்குளம் ஆகியவற்றையும் சீரமைத்து புதுப்பிக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளி, விண்ணம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:15 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#48532

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

பேரணாம்பட்டு நகராட்சியில் நெடுஞ்சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை கொடுப்பதுடன் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 11
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:05 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48531

ஆட்டோக்களால் இடையூறு

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே பெரிய புங்கமரம் உள்ளது. அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. ஆனால், மரத்தின் நிழலில் ஆட்டோக்களை நிறுத்தி பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து, பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஆட்டோக்களை அங்கு நிறுத்த விடாமல் தடுக்க வேண்டும். -பி.சியாமளா, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 7:58 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#48530

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ்காந்தி நகரை சுற்றி உள்ள தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகேந்திரன், வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48529

நடைபாதை சரி செய்யப்படுமா?

நடைபாதை சரி செய்யப்படுமா?சாலை

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் உள்ள தேவாலயத்தின் முன்பு உள்ள கால்வாய் மேல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் சிமெண்டு சிலாப் உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். - ராஜ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 7:53 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48528

டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம்மின்சாரம்

வேட்டவலம்-திருக்கோவிலூர் ரோடு அலோசியஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்கள் சிமெண்டு பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை மின்வாரியத்துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜோசப், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 7:47 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48527

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

மற்றவை

திருவண்ணாமலை பெரிய கடை தெரு காய்கறி மார்க்கெட் தெருவில் பாதாள சாக்கடை உடைந்து சுமார் ஒரு வாரமாக மக்கள் நடமாடும் பகுதியில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. காய்கறி மார்க்கெட் பகுதியில் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரஜினி. திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 7:44 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48526

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

வேட்டவலத்தை அடுத்த ஆவூரில் இருந்து நாரையூர் செல்லும் சாலையில் ஏரி பகுதியில் சாலையை அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல் பணி நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் எச்சரிக்கை பலகையோ, தடுப்போ வைக்கப்படவில்லை என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தோண்டப்பட்ட பள்ளத்தின் ஓரம் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக தினத்தந்திக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். -சத்தியமூர்த்தி, வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 9:10 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#48368

கழிவறையை சீரமைக்க வேண்டும்

கழிவுநீர்

வாணியம்பாடி தலைமை தபால் அலுவலகத்தில் கழிவறை கதவுகள் உடைந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. அந்தக் கதவின் உடைப்பை சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலாயுதம், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 9:08 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48367

ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

ஆபத்தான மரம் அகற்றப்படுமா?மற்றவை

நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தின் தென்மேற்குத் திசையில் மரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. அதன் கிளைகள் முறிந்து கீழே விழுகின்றன. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -சம்பத், சமூக ஆர்வலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 9:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48366

கழிவுநீர் கால்வாய் சேதம்

கழிவுநீர் கால்வாய் சேதம்கழிவுநீர்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பாதர்கெசு ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உடைந்துள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைப்பார்களா?-உதயகுமார், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 9:04 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#48365

சாய்வாக இருக்கும் மின்கம்பம்

சாய்வாக இருக்கும் மின்கம்பம்மின்சாரம்

வாணியம்பாடி கோணாமேடு அருகில் பழைய மாட்டுத்தொட்டிக்கு செல்லும் வழியில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்வாக உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விபரீதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். -அஸ்லாம், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick