Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2024 8:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49738

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் கட்டிட பணிகளுக்காக மணலும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்து, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49737

சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49736

ஒரே இடத்தில் கிடக்கும் குப்பை தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள் கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். குப்பைத்தொட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமோதரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:09 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#49735

தெருவில் தேங்கும் மழைநீர்

தெருவில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் உள்ள தபால் அலுவலக தெருவில் மழைப் பெய்யும்போது, மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அருகில் உள்ள கால்வாயில் இருந்தும் கழிவுநீர் நிரம்பி தெருவில் ஓடுகிறது. அதில் பள்ளி சிறுவர், சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் நடந்து செல்கிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, பரதராமி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49731

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு வேலூர்-ஆற்காடு சாலையில் பயணிகள் நிழற்குடை வசதி உள்ளது. ஆனால், இந்தப் பக்கம் தீர்த்தகிரி முருகன் கோவில் ஆர்ச் எதிரே ஆற்காடு-வேலூர் சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மரத்துக்கு கீழேயும் நிற்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், புதுவசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49729

புதிய பஸ் நிலையத்துக்குள் மரக்கன்றுகள் நட வேண்டும்

மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் உள்ளே மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் ஒரு மரக்கன்றுகள் கூட இல்லை. மழைப் பெய்தால் அப்பகுதி சேறும் சகதியுமாக உள்ளது. அந்த இடத்தில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:01 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#49727

கரடு முரடான சாலை

கரடு முரடான சாலைசாலை

அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியப்பட்டு கிராமத்தில் இருந்து புளியமரத்தூர் செல்லும் சாலை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடாக உள்ளது. முறையான மண் சாலை வசதி கூட இல்லாமல் மலைக் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மலைக் கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மண் சாலையாவது அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்ககை எடுக்க வேண்டும். -ஜெஸ்வந்த், புளியமரத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:59 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#49725

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலைப்பணி பாதியாக ஒருபக்கம் மட்டும் நடந்துள்ளது. மறுபக்கம் அப்படியே விடப்பட்டு உள்ளதால் வாகனங்கள், பயணிகள் சேற்றில் சிக்கி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக விடுபட்ட பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரங்கநாதன், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 9:14 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#49430

நடைபாதையை சீரமைக்க வேண்டும்

நடைபாதையை சீரமைக்க வேண்டும்சாலை

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நடைபாதையில் கம்பிகள் நீண்டுள்ளன. அந்த வழியாக நடந்து செல்வோரின் கால்களை கம்பிகள் பதம் பார்த்து விடும் அபாயம் உள்ளது. அதை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். -வரதராஜன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 23
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 9:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49429

பட்ட மரம் அகற்றப்படுமா?

பட்ட மரம் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மைதானங்களுக்கு இடையில் பட்டுப்போன மரம் ஒன்று, சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதேபோல் கோட்டை வளாகத்தில் 3 மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாப்பாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 9:10 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#49428

கொசு மருந்து தெளிக்க வேண்டும்

கொசு மருந்து தெளிக்க வேண்டும்மற்றவை

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பள்ளம் அருகில் கஸ்பா பகுதியில் பல ஆண்டுகளாக ஓடாத கழிவுநீர் குட்டை கொசு உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகிறது. அதில் கொட்டப்படும் மக்கும், மக்காத குப்பைகள் பரவலாக மிதக்கிறது. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீர் குட்டையில் கிடக்கும் குப்பைகளை அகற்றி டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மே.நாதமுனி, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 9:08 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#49427

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமின்சாரம்

குடியாத்தம் புதுப்பேட்டை பீமராஜமுதலி தெருவில் மின் இணைப்பு கம்பிகளில் ஆபத்தான நிலையில் சுற்றிக்கிடந்த கொடிகளை அகற்றக்கோரி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் கொடிகளை அகற்றி சீரமைத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிேறாம். -பஞ்சாட்சரம், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick