Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2024 8:44 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#49751

முறையாக அகற்றப்படாத குப்பைகள்

குப்பை

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் வீடுகளின் வாசல்களுக்கு வந்து விடுகின்றன. மேலும் சில சமயங்களில் துர்நாற்றமும் வீசுகிறது. தற்போது வேங்கிக்கால் ஊராட்சி திருவண்ணாமலை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. வேங்கிக்கால் பகுதியில் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகின்றனர். இருப்பினும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 30
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#49750

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆரணி காந்தி ரோடு பிள்ளையார் கோவில் தெரு முகப்பில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. அதில் ஏராளமான குப்ைபகள் விழுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சரியாக செல்வதில்லை. கால்வாயை முறையாக தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுபாஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:41 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#49749

கால்வாய் உடைப்பு

கால்வாய் உடைப்புசாலை

தேசூர் பேரூராட்சியில் செஞ்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைந்து 2 மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. பேரூராட்சி நிர்வாகம் கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். -ம.ரவி, தேசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:39 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#49748

கால்வாயை தூர்வாருவார்களா?

கால்வாயை தூர்வாருவார்களா?கழிவுநீர்

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் கிராமம் வழியாக பெரும்பட்டாம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நவாஸ், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#49746

மின் விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையிலும், அரசு மருத்துவக் கல்லூரி பகுதியிலும் பல மாதங்களாக சரியான முறையில் மின் விளக்குகள் எரியவில்லை. மின் விளக்குகள் எரிய மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஐயப்பன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:32 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#49745

சீரமைக்கப்படாத சாலை

சீரமைக்கப்படாத சாலைசாலை

வாலாஜா தாலுகா மேல்சிண்டிகேட் புதூர் கிராமத்துக்கு செல்லும் சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், மேல்சிண்டிகேட் புத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49744

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்

மற்றவை

அரக்கோணம்-சோளிங்கர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு வரும் மது பிரியர்களால் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் கல்லூரி மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பஸ் மற்றும் கனரக வாகனங்களும் அந்த இடத்தை கடந்து செல்வதற்குள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது. அங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருமூர்த்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#49743

கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்

கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்கழிவுநீர்

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவிராயன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரிலும், அங்கன்வாடி மையம் எதிரிலும் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கால்வாய் முழுமை பெறாமல் பகுதி அளவே கட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கால்வாயை சீர் செய்து கொசுப் புழுக்கள் உருவாவதை தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். -முருகன், திமிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:24 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49742

வேகத்தடை அமைக்கப்படுமா?

வேகத்தடை அமைக்கப்படுமா?சாலை

காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் பன்னியூர் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே பன்னியூர் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதியழகன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#49741

ஆபத்தான நிலையில் மின் கம்பம்

ஆபத்தான நிலையில் மின் கம்பம்மின்சாரம்

திமிரி அருகே மேட்டுகுடிசை செல்லும் சாலை அருகே விவசாய நிலத்தில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. கம்பத்தின் மேலே உடைந்த நிலையில் தொங்கியபடி பல மாதங்களாக மின்கம்பம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், மேட்டுகுடிசை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#49740

மணல் கொள்ளையை தடுப்பார்களா?

மற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இரவில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49739

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே காளத்தியூரில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சோமசேகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick