Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Sep 2024 8:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49922

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே ஆதியூரில் இருந்து எலவம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வரை செல்லும் சாலை மோசமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் அவதியடைகின்றனர். எனவே அந்தச் சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜீவரத்தினம், ஆதியூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49921

குரங்கு தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் நகரில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#49920

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் முகமது புரா தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அந்தத் தெரு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை எரிய விட வேண்டும். -சையத், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49919

குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குவித்து வைக்கப்பட்டு உள்ள குப்பைகள் வெகுநாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. மேலும் குப்பை வண்டிகளும் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி பள்ளி மாணவ- மாணவிகள் அவதியடைகின்றனர். குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், கொரட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:58 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#49918

குரங்குகளை பிடிக்க வேண்டும்

மற்றவை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளன. குரங்குகள் அங்குள்ள 3 குழாய்களை திறந்து தண்ணீர் குடிக்கின்றன. பொதுமக்கள் அருகில் வந்தால் கடிக்க பாய்கின்றன. மக்கள் கொண்டு வரும் பைகளை பிடுங்கி கொண்டு ஓடி விடுகின்றன. உடனடியாக வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் குரங்குகளை பிடித்து காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49917

சுவர்களை பாழாக்கும் சுவரொட்டிகள்

மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். சுவரொட்டிகளால் சுவர்கள் பாழாகிறது. தாலுகா அலுவலக சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும். -ராஜா, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:54 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49916

சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீச்சு

சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீச்சுகுப்பை

சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சி ஏரிக்கரை சாலையோரம் இரவில் சிலர் மூட்டைகளில் இறச்சி கழிவுகளை கொண்டு வந்து வீசுகிறார்கள். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. சாலையோரம் இறைச்சி கழிவுகளை வீசுவோர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், பெருங்காஞ்சி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49915

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

காவேரிப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை, மாலை இரு வேளைகளும் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:48 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49914

கடைகளின் வெளிச்சத்தில் செல்லும் மக்கள்

மின்சாரம்

அரக்கோணம் அவுசிங் போர்டு பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. அதேபோல் அறிவு சார் நூலக கட்டிட வளாகத்திலும் மின் விளக்குகள் ஏதும் எரிய வில்லை. இதனால் பொது மக்கள், வணிக கடைகளின் மின் விளக்கு வெளிச்சத்திலேயே சென்று வருகின்றனர். நகரில் மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ் குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:45 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#49913

அரசு டவுன் பஸ் விடுவார்களா?

போக்குவரத்து

தேசூர் அருகே பல குக்கிராமங்களை கொண்ட மகமாய்திருமணி பெரிய கிராமம். சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து சேத்துப்பட்டு, மடம், தேசூர், மகமாய் திருமணி வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசு டவுன் பஸ் விட வேண்டும். அவ்வாறு விட்டால் நோயாளிகள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். அரசு டவுன் பஸ் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பவானிபழனி, மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:43 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#49912

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் பல மலைக்கிராமங்களை கொண்ட ஆட்டியானூர் பெரிய கிராமம் உள்ளது. அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் மலை வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 7:41 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#49911

வேகத்தடையில் வெள்ளை அடிக்க வேண்டும்

சாலை

வந்தவாசி இந்திராநகர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி எதிரில் சாலையின் குறுக்கே 2 வேகத்தடைகள் உள்ளன. அதில் வெள்ளை அடிக்கவில்லை. இதனால் இரவில் வாகனங்களில் வருவோர் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையில் வெள்ளை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ப.தமிழ்வாணி, இந்திராநகர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick