Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2024 8:34 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#50101

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

மற்றவை

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் நடந்து செல்லும் பகுதியில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ராஜகோபுரம் முன்புள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -ராஜன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#50100

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணிகழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி புதிய காலனி பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இது, அந்த வழியாக செல்வோருக்கு சிரமமாக உள்ளது. சிறுவர்-சிறுமிகள் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. கால்வாய் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:27 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#50099

ஆவடி வரை ரெயிலை நீட்டிக்க வேண்டும்

போக்குவரத்து

வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மதியம் 12 மணியளவில் அரக்கோணம் சென்று சேருகிறது. அந்த ரெயிலை அரக்கோணத்தில் 2½ மணிநேரம் நிறுத்தி வைக்கிறார்கள். அங்கு நிறுத்தி வைக்கும் ரெயிலை ஆவடி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இதுதொடர்பாக அரக்கோணம் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வக்கீல் சிவக்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 17
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#50097

நாய்கள் தொல்லை

மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகள் ஆகியோரை நாய்கள் குரைத்தபடி விரட்டுகின்றன. இரவில் நாய்கள் கூட்டமாக கூடி சண்டையிடுவதால் ஏற்படும் சத்தம் காரணமாக மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிசுந்தரம், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#50096

குப்பைத்தொட்டியை காணவில்லை

குப்பைத்தொட்டியை காணவில்லைகுப்பை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை முறையாக ேசகரிக்க நகராட்சி நிர்வாகம் சுமார் ரூ.7.30 லட்சத்தில் குப்பைத் தொட்டிகள் வைத்தது. அந்தத் குப்பைத்தொட்டிகள் ஒருசில இடங்களில் காணாமல் போய் விட்டன. காணாமல் போன குப்பைத்தொட்டிகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#50095

வளைந்த மின் கம்பம்

வளைந்த மின் கம்பம்மின்சாரம்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடை அருகில் ஏற்கனவே நடந்த ஒரு விபத்தால் மின்கம்பம் வளைந்தது. அந்தக் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற அச்சம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் நட வேண்டும். -முருகேசன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#50094

வாகனங்களை ஏலத்தில் விடுவார்களா?

வாகனங்களை ஏலத்தில் விடுவார்களா?மற்றவை

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாராய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மழையிலும், வெயிலிலும் சேதமடைகின்றன. நீதி விசாரணை முடிந்த வாகனங்களை ஏலத்தில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#50093

சாலை பழுது

சாலை பழுதுசாலை

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வரை (கத்தாரி கூட்ரோடு) உள்ள சாலை பழுதடைந்து 5 ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. ஒரு சில இடத்தில் தார் பெயர்ந்தும், மற்ற சில இடங்களில் மண் சாலையாகவும் காட்சியளிக்கிறது. சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கமித்ரன், பள்ளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50092

பயனற்ற அடி பம்புகள்

தண்ணீர்

திருப்பத்தூர் காந்திபுரம் பகுதியில் 2 அடிபம்புகள் மண்ணில் புதைந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு உள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50091

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் கலெக்டர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்தச் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தக் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -ராமையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50090

பயனற்ற குப்பை தொட்டி

குப்பை

திருப்பத்தூர் சி.கே. ஆசிரமம் பகுதியில் குப்பைத்தொட்டி ஒன்று பயனற்ற நிலையில் கவிழ்ந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைத்தொட்டியை முறையாக வைத்து குப்பைகளை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50089

தார் அல்லது சிமெண்டு சாலை போட வேண்டும்

சாலை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவிலுக்கு வரும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி உள்ளனர். ஆனால் இன்னும் சாலையில் தாரோ, சிமெண்டோ போடவில்லை. அந்தச் சாலையில் சிமெண்டு சாலையாகவோ, தார் சாலையாகவோ அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், தோட்டப்பாளையம் வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick