Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2024 8:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50273

உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் தெற்கு அவென்யூ சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு இருந்தது. அது, பழுது ஏற்பட்டதால் பழுது நீக்கும் பணிக்காக அகற்றப்பட்டது. ஆனால் இன்னும் அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மீண்டும் அதே இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமதாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50272

கால்வாயில் தேங்கிய குப்பைகள்

கால்வாயில் தேங்கிய குப்பைகள்குப்பை

வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம் அருகே கஸ்பா பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - ேமாகனசுந்தரம், ேவலூா்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50270

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

சாலை

வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகர் விரிவாக்கம் ஆசிரியர் நகர் பகுதியில் 8 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லை. சமீபத்தில் சாலை அமைக்கும் முயற்சி நடந்தது. அதற்காக வீடுகளின் முன்னால் இருந்த படிகளை அகற்றினர். ஆனால், சாலை போடும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் மக்களுக்கு சிரமமாக உள்ளது. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் ெதாடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.என்.தனசேகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50269

கோட்டை அகழிக்கரை சீரமைக்கப்படுமா?

கோட்டை அகழிக்கரை சீரமைக்கப்படுமா?மற்றவை

வேலூர் கோட்டை சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. கோட்டையைச் சுற்றிலும் அகழி உள்ளது. அந்த அகழியைச் சுற்றி உள்ள கரைகளில் ஒரு சில இடங்கள் கற்கள் பெயர்ந்து சிதலமடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதலமடைந்து காணப்படும் கோட்டை அகழி கரையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50268

சாலை அமைக்க வேண்டும்

சாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் பல தெருக்கள் உள்ளன. இந்தத் தெருக்களில் சிமெண்டு சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் 4-வது தெருவில் இருந்து 100 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அந்தப் பகுதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும். -குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:53 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#50267

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம நடுநிலைப்பள்ளியை ஒட்டி ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்கிறார்கள். அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -பஞ்சநாதன், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:49 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#50266

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

போளூர் அல்லி நகரில் இருந்து அத்திமூர் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு பாம்பு கடி, விஷ கடி, விபத்து, அறுவை சிகிச்சை போன்ற முக்கிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்படுகிறது. இரவில் போளூர் அல்லி நகரில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் எரியவில்லை. இரவில் பொதுமக்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். உடனடியாக போளூர் பேரூராட்சி நிர்வாகம் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:46 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50265

நூலகம் அமைக்க வேண்டும்

மற்றவை

ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். வேலை வாய்ப்பு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பொது அறிவை தெரிந்து கொள்ள ஒரு நூலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:44 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50264

சீரான குடிநீர் வினியோகம் தேவை

சீரான குடிநீர் வினியோகம் தேவைதண்ணீர்

வந்தவாசியில் புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீருக்காக அல்லல்படுகின்றனர். நகராட்சியில் இருந்து லாரியில் குடிநீரை கொண்டு வந்து தொட்டியில் நிரப்பி அதன் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்வது வழக்கம். தற்போது குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. ஆகையால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பழுதுநீக்கி மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமஜெயம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 7:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#50263

தற்காலிக கடை நடத்துவோர் மீது நடவடிக்கை

மற்றவை

திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையில் சிலர் தற்காலிக உணவுப்பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் கடை நடத்துகிறார்கள். அவர்கள் தயாரித்து விற்பனை செய்யும் உணவுப்பொருட்களால் பக்தர்களுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. ஆகையால், கிரிவலப்பாதையில் உரிய அனுமதி பெறாமல் தற்காலிக உணவுப் பொருட்கள் விற்பனை கடை நடத்துவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜராஜன், காஞ்சி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:40 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#50104

நேரடி பஸ் வசதி

போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இருந்து சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. கீழ்பென்னாத்தூரில் இருந்து அவுலூர்பேட்டை வந்து, அங்கிருந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியோர் சிரமப்படுகின்றனர். ஆகையால் சேத்துப்பட்டு-கீழ்பென்னாத்தூர் இடையே இரு விதமான கட்டணத்துடன் டவுன் பஸ் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரங்க.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 61
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50103

ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?

மற்றவை

ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே மொழுகம்பூண்டி கிராமத்தில் ஏதேனும் ஒரு வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் முன்வருவார்களா? -பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick