Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Oct 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#50455

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

வெம்பாக்கம் தாலுகா சித்தாத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து உள்ளே இருக்கின்ற கம்பிகள் வெளியே தெரிகின்றன. அதிகாரிகள் நேரில் வந்து பார்ைவயிட்டு ஆய்வு செய்து, புதிய குடிநீர் தொட்டி கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். -செல்வராஜ், சித்தாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:18 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#50454

படவேடு-சென்னைக்கு பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பிரசித்தி பெற்ற ஆன்மிக தலம். அங்கு தினமும் பலர் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். படவேட்டில் இருந்து படவேடு அனந்தபுரம், காளசமுத்திரம், குப்பம், கொளத்தூர், கண்ணமங்கலம் வழியாக சென்னைக்கு பஸ் இயக்க வேண்டும். அதேபோல் சென்னையில் இருந்து படவேடு வரை பஸ் இயக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். -சிவக்குமார், படவேடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 9:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50453

பழுதான பேட்டரி வாகனங்கள்

பழுதான பேட்டரி வாகனங்கள்மற்றவை

ஆரணி நகராட்சி நீரேற்றும் பகுதியில் பழுதடைந்த பேட்டரி வாகனங்களை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. அதை பழுதுப் பார்த்து பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? -ரெங்கராஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#50452

பராமரிப்பின்றி காணப்படும் சுகாதார வளாகம்

பராமரிப்பின்றி காணப்படும் சுகாதார வளாகம்மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் பொது சுகாதார வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. அதை பழுதுப் பார்த்தால் மக்கள் பயன்படுத்தலாம். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தன், மல்லவாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50282

பயனற்ற குப்பை தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகில் ஆண்டியப்பனூரில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் பயனற்ற நிலையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். குப்பைத்தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ைவக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50281

குடிநீர் தொட்டிகள் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே விஷமங்கலத்தில் குடிநீர் தொட்டிகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்குள்ள குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும். -ஆகாஷ், விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50280

சாலை பழுது

சாலை

திருப்பத்தூர் அருகில் பேராம்பட்டு கிராமத்தை அடுத்த மண்குன்று மலையில் இருந்து அதற்கு மேலே கோவிலுக்கு செல்லும் சாலை பழுதாகி மிக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காமராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50279

குப்பைகளை முறையாக வாங்கி செல்வார்களா?

குப்பை

திருப்பத்தூர் ஏரிக்கோடியூர் பகுதிகளில் குப்பை வண்டிகளில் வந்து குப்பைகளை வாங்கி செல்வது இல்லை. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி எரிக்கின்றனர். எனவே குப்பைகளை முறையாக வாங்கி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தங்கராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50278

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

குனிச்சி அருகே பெரிய கண்ணாலப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளி முன்பு செல்லும் திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இவற்றால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும். -நெடுஞ்செழியன், குனிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#50277

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை, நெமிலி, பனப்பாக்கம்-திருத்தணி பிரதான சாலையின் ஒரு பகுதி சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. சாலையை சீர் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர்சிங், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:18 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#50276

உயர் கோபுர மின் விளக்கை எரிய விட வேண்டும்

மின்சாரம்

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தர விநாயகர் கோவில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அது, பல மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தப் பகுதி முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும். -உதயகுமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#50275

மேடு பள்ளமான தேசிய நெடுஞ்சாலை

சாலை

வாலாஜா மார்க்கெட் முதல் அம்மூர் வரையிலும், பஸ் நிலைய நுழைவு வாயில் முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையிலும் தேசிய நெடுஞ்சாலைகள் மேடு, பள்ளமுமாக உள்ளது. இதனால் ஆட்டோக்களில் செல்லும் கர்ப்பிணிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick