Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Aug 2022 9:47 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#11198

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

ராணிப்பேட்டை சிப்காட்டில் கிளை நூலகம், கூட்டுறவு வங்கி ஆகியவை உள்ளன. இவற்றுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் சிரமப்படுகின்றனர். சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இச்சாலையை சீரமைத்துத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். -குணசேகரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 9:43 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#11197

சாலையோரம் வடிகால் வசதி தேவை

சாலையோரம் வடிகால் வசதி தேவைசாலை

திருவண்ணணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் மங்களூரு-தூத்துக்குடி நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் அமைந்துள்ள கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் மழை பெய்யும்போது மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. சாலையில் ஆங்காங்ேக தேங்கி குளம்போல் உள்ளது. இச்சாலை ஓரம் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 9:40 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#11196

சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து நீண்ட நாட்களாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே சிதிலமடைந்த மேற்கூரையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும். -பொதுமக்கள், வீரராகவபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 9:33 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#11195

கிராம சேவை மைய கட்டிடத்தை திறப்பார்களா?

கிராம சேவை மைய கட்டிடத்தை திறப்பார்களா?மற்றவை

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடலூர். இங்கு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி பல ஆண்டுகள் ஆகியும் அதை தற்போது வரை திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா? அஜித், கூடலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 5:05 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#11186

பாறை கற்களை அகற்றுவார்களா?

பாறை கற்களை அகற்றுவார்களா?சாலை

ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் கூர்மையான கரடுமுரடான பாறை கற்கள் கிடக்கின்றன. ெகாண்டை ஊசி வளைவில் வாகனங்கள் திரும்பும்போது, ஓரமாக கிடக்கும் பாறைகள் மீது மோதி விபத்துகள் நடக்கின்றன. எனவே கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் தேவையில்லாமல் கிடக்கும் கூர்மையான, கரடுமுரடான பாறை கற்களை அகற்றுவார்களா? இளங்கோ, அத்தனாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#11184

உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

ஏலகிரிமலையில் பதப்படுத்தப்பட்ட மற்றும் கலப்பட உணவுகள் அதிக அளவில் விற்கப்படுகிறது. மேலும் மீன்களில் சிவப்பு நிற கலர் பொடி கலந்து தரமற்ற எண்ணெயில் பொரித்து, திறந்த வெளியில் ைவத்து விற்பனை செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா? நடராஜன், ஏலகிரிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 12:40 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#11034

ஏரி பாசன கால்வாயை மீட்க வேண்டும்

ஏரி பாசன கால்வாயை மீட்க வேண்டும்தண்ணீர்

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் ஏரி சென்ற ஆண்டு நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டும் நிரம்பி வருகிறது. இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தருகிறது. பாசனக் கால்வாய் வயல்வெளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால். ஏரிநீர் பாய்ந்து 500-க்கும் மேற்பட்ட தென்னை, விவசாய நிலங்கள் மூழ்கி வருகிறது. பாசனக் கால்வாயைக் கண்டுபிடித்து மீட்டு, அதில் ஏரிநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். ஜலேந்திரன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#11024

வாகனங்களால் ேபாக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையின் முன்பு உள்ள காந்தி சிலை அருகே இருபுறமும் சாலையோரம் பலர் கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கோட்டையைச் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அங்கு வாகனங்கள் நிறுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமோதரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 11:30 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#11015

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலையை சீர் செய்ய வேண்டும்சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து சுடுகாடு செல்லும் வழியில் உள்ள சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும். சந்தோஷ், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 10:59 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#11010

சேதமடைந்த சாலையை புதிதாக அமைப்பார்களா?

சேதமடைந்த சாலையை புதிதாக அமைப்பார்களா?சாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாணாவரம் மோட்டூர் செல்லும் சாலை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் சேதமடைந்துள்ளது. இந்த வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் சரியான சாலை வசதி இன்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த சாலையை புதிதாக அமைப்பார்களா? ராமு - பாணாவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 10:54 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#11008

தூர்வாரும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்

குப்பை

ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து தூர்வாரி அள்ளப்படும் குப்பைகளை கால்வாயில் ஓரமாகவே கொட்டுகின்றனர். பின்னர் அந்தக் குப்பைகள் காய்ந்த பின்னர் வண்டிகள் மூலம் வாரி அப்புறப்படுத்துகின்றனர். அவ்வாறு வாரப்படும் குப்பைகள் கழிவு நீர் கால்வாய் ஓரம் கொட்டுவதால் தினமும் மழை பெய்வதால் மீண்டும் அது கழிவுநீர் கால்வாயிலேயே தேங்குகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே தினமும் அள்ளப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றப்படுமா? சங்கர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 10:43 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#11006

பள்ளத்தை மூடுவார்களா?

பள்ளத்தை மூடுவார்களா?சாலை

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் ஜெயலட்சுமி நகரில் 1-வது வார்டில் சாலையில் ெபாிய பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீர் செய்யவில்லை. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. பொதுமக்கள், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick