Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Aug 2022 1:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#11282

மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டும்

மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டும்மற்றவை

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் மழைப் பெய்தால் மழைநீர் வடிய போதிய வடிகால்வாய் வசதி இல்லை. மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருவில் ஆறாக ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 1:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#11279

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?மற்றவை

திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.110 கோடியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்துக்கு பின்புறம் ஏற்கனவே வனத்துறையால் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடத்தில் நாகத் தகடுகளை வைத்து மறைத்துள்ளனர். கோடிக்கணக்கில் செலவு செய்த அரசு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். -எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 1:02 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#11267

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

குடியாத்தம் வ.உ.சி. தெருவில் உள்ள ஒரு கோவிலின் பின்புறம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் அடியில் உள்ள கால்வாய் குப்பை கொட்டும் தொட்டியாக மாறி வருகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். -தூயவன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#11246

ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

வேலூர் ஆற்காடு சாலையில் அதிகமான வாகனங்கள் செல்கிறது. தனியார் மருத்துவமனை அருகே சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். அதனால் அங்கு திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்தகுமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:26 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#11242

நகரும் படிக்கட்டு சரி செயல்படுமா?

நகரும் படிக்கட்டு சரி செயல்படுமா?மற்றவை

காட்பாடி ரெயில் நிலையம் பயணிகள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இங்கு பயணிகள் செல்வதற்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நகரும் படிக்கட்டுகள் கடந்த சில மாதங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் நடைமேடையை கடக்க சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் நகரும் படிக்கட்டுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருவிக்ரராமன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#11240

சாலை அமைக்க வேண்டும்

சாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளி பகுதியில் 1-வது மெயின் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாதாரண நாட்களில் கூட இருசக்கர வாகனங்களில் செல்ல சிரமமாக இருக்கும். தற்போது மழை பெய்து வருவதால் அந்த பள்ளங்கள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். அங்கு விரைந்து சாலை அமைக்க வேண்டும். -பாலசந்திரன், ேவலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 10:34 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#11209

தெருவில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் 3-வது தெருவில் உள்ள கால்வாயில் இருந்து கடந்த சில நாட்களாக கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லையும், துர்நாற்றமும் வீசி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 10:31 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#11208

சாலை நீண்டு வளர்ந்துள்ள முட்புதர்களால் இடையூறு

சாலை நீண்டு வளர்ந்துள்ள முட்புதர்களால் இடையூறுசாலை

படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட காளிகாபுரத்தில் இருந்து அரசமரம் கிராமம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்கள் வளா்ந்து சாலை வரை நீண்டுள்ளது. இதனால் பள்ளி வேன்கள், பள்ளி ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலை வரை நீண்டு வளர்ந்து, இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்ற படவேடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திகேயன், படவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 10:24 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#11207

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

ஆரணி பெரியார் நகர் மணியம்மை வீதியில் மக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பறை நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைைய கழிக்க கழிப்பிட வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? -விஜயராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 10:00 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#11205

மின் விளக்கு வசதி தேவை

மின்சாரம்

ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் முகப்பு பகுதியில் செல்லக்கூடிய சாலையில் தெரு விளக்கு கிடையாது. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வாறு தனியாக செல்லும் பெண்களிடத்தில் சங்கிலி பறிப்பு சம்பவங்களும் நடக்கிறது. அதைத் தடுக்க தெரு விளக்கு அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். -பலராமன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 9:57 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#11202

வீணாகும் அரசு கட்டிடங்கள்

மற்றவை

திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டு அனைத்து அலுவலகங்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே இயங்கி வந்த கட்டிடங்கள் தற்போது பூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கை அலுவலகம் போன்ற கட்டிடங்கள் பூட்டப்பட்டு பயனற்றுப் போகும் நிலை உள்ளது. எனவே நல்ல நிலையில் உள்ள கட்டிடங்கள் வீணாகாமல் வேறு அலுவலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். -பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 9:50 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#11199

எல்.இ.டி.பல்பு பொருத்துவார்களா?

மின்சாரம்

வாலாஜா கோனேரி தெரு சந்திப்பில் உள்ள பரசுராமன் தெருவில் முதல் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கு சரியாக எரிவதில்லை. அந்த மின் விளக்கை மாற்றி விட்டு நிரந்தரமாக எல்.இ.டி. பல்பு பொருத்தி எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிங்கராயர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick