Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Sep 2022 2:29 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#16788

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் இருந்து எல்.எப்.ரோடு, பிஞ்சி வழியாக பை-பாஸ் சென்றடையும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக தோல் தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் சாலையை சீா் ெசய்ய வேண்டும். - கே.குணசேகரன், ராணிப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 1:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#16739

பூட்டி கிடக்கும் பூங்கா

பூங்கா

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் திரையரங்கம் எதிரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் பூட்டியே கிடைக்கிறது. அதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து பயனற்று உள்ளன. பல லட்ச ரூபாய் செலவு செய்து அரசு அமைத்த இந்த பூங்காவை மீண்டும் செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள வேண்டும். -ராஜா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 1:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#16736

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாசிலாமணி தெரு வழியாக விண்ணரசி மாதா தேவாலயத்திற்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களும் ஒரு சில இடத்தில் விரிசல் ஏற்பட்டும் சேதமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தயாநிதி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 1:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#16727

சாலையோர பள்ளத்தில் தேங்கும் கழிவுநீர்

சாலையோர பள்ளத்தில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம்-ஆலங்காயம் மற்றும் வெங்களாபுரம்-ஏழருவி செல்லும் சாலையையொட்டி 2 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் வெங்களாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதிய காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அந்தக் கழிவுநீர் ஆலங்காயம் சாலையில் ஓடி 2 அடி ஆழ பள்ளத்தில் தேங்குகிறது. அந்த வழியாக எதிர் எதிரே வரும் 2 வாகனங்கள் மாறி செல்லும்போது 2 அடி ஆழ பள்ளத்தில் சக்கரங்கள் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள 2 அடி ஆழ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#16718

சுகாதாரம் இல்லாத கழிப்பிடம்

சுகாதாரம் இல்லாத கழிப்பிடம்கழிவுநீர்

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில், நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் திறந்தவெளி இலவச சிறுநீர் கழிக்கும் இடம் உள்ளது. அங்கு தூய்மை செய்ய தண்ணீர் வசதி இல்லை. வேறு வழி இல்லாததால் பலா் பயன்படுத்துகின்றனர். அங்கு சுத்தமும் இல்ைல, சுகாதாரமும் இல்லை. நுழைவு வாயிலில் மட்டுமே உள்ள தண்ணீர் குழாயை எப்படிப் பயன்படுத்துவது? இங்கு பெண்கள் நுழைய அச்சப்படுகின்றனா். நகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்குமா? -தூயவன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 11:45 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#16708

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

அரக்கோணம் சுவால்பேட்டை தர்மராயா தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை மாடுகள் கிளறி விடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அரக்கோணம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும். -அருண்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 11:38 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#16706

சிமெண்டு சிலாப் சீரமைக்கப்படுமா?

சிமெண்டு சிலாப் சீரமைக்கப்படுமா?மற்றவை

வேலூர்-காட்பாடி சாலையில் கழிஞ்சூர் திருநகர் பஸ் நிறுத்தம் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு இடத்தில் சிமெண்டு சிலாப் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி விட்டது. அந்தப் பள்ளத்தில் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#16704

கசக் கால்வாய்களை தூர்வார வேண்டும்

மற்றவை

அணைக்கட்டு அருகில் உள்ள பேயாற்றில் இருந்து பிரித்துக் கொண்டு செல்லும் 6 கசக்கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளது. இந்தக் கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், வெட்டுவாணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 10:59 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#16687

பட்டா மாற்றம் குறைகள் தீர்க்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மனுக்கள் வாங்கப்படுகிறது. அதில் பெரும்பாலான மனுக்கள் பட்டா மாறுதல் மனுக்கள் ஆகும். அந்த மனுக்களை கலெக்டர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் நிலம் வேறொருவர் பெயரில் பதிவு செய்ததும் பதிவுத்துறை மூலமே தாசில்தாருக்கு அனுப்பி, தாசில்தார் தாமாகவே பட்டா மாற்றம் செய்தால் பெரும்பாலான விவசாயிகள், பொதுமக்களின் குறைகள் தீரும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 10:30 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#16685

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாலாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போதிய போலீசாரை நியமிக்க வேண்டும். -செல்வராஜ், சம்மந்திகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 10:21 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#16684

குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும்

குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும்தண்ணீர்

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அருகே நாயனத்தியூர் காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 20 ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை அகற்றினால் அப்பகுதி பொதுமக்களுக்கு போதுமான வழி ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிைய அகற்ற முன்வர வேண்டும். -ஆனந்தன், கூட்டுறவு சங்க இயக்குனர், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 10:17 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#16683

பயன்பாட்டுக்கு வராத கழிவறை

பயன்பாட்டுக்கு வராத கழிவறைமற்றவை

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அணுக்குமலை ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பான்கொட்டாய் பகுதியில் ரூ.5¼ லட்சத்தில் பணிகள் முடிந்த நிலையில் உள்ள சமுதாய கழிவறை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -சுரேஷ், அணுக்குமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick