Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Oct 2022 12:54 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#18607

சுத்தமில்லாத பஸ் நிலையம்

குப்பை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் காணும் இடமெல்லாம் குப்பை கூளமாக சுத்தமில்லாமல் காட்சியளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#18602

உரம் சேகரிக்கும் கிடங்கு செயல்படுமா?

உரம் சேகரிக்கும் கிடங்கு செயல்படுமா?மற்றவை

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் வாரச் சந்தை வளாகத்தில் உரம் சேகரிக்கும் கிடங்கு அமைத்து பல ஆண்டுகளாகிறது. இது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதை முறையாகப் பயன்படுத்தி, உரம் சேகரிக்கும் பணியை மேற்கொண்டால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற விவசாயிகள் பயன் பெறுவர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோபாலகிருஷ்ணன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18596

ஆபத்தான நிலையில் பட்டமரம்

ஆபத்தான நிலையில் பட்டமரம்மற்றவை

வேலூர் கோட்டை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கோட்டையைச் சுற்றி பார்க்க நடந்து செல்கின்றனர். அங்கு அருங்காட்சியகம் செல்லும் வழியில் பட்ட மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. காற்றடிக்கும் போதெல்லாம் அந்த மரத்தின் கிளைகள் முறிந்து கீழே விழுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள பட்டமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 4:29 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#18595

நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்

நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்மற்றவை

வந்தவாசி 19-வது வார்டு சன்னதி தெருவில் தனியார் மருத்துவமனை அருகில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும். -எஸ்.முருகானந்தம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 10:25 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#18585

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

கலவை-சென்னசமுத்திரம் சாலையில் அப்பாதுரைப்பேட்டை பகுதியில் சாலை ஓரம் உள்ள கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு டெங்கு, விஷ காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். -வி.மோகன், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 10:09 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#18581

உடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்

உடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்சாலை

காட்பாடியில் அழகர் ஓட்டல் அருகில் 10 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கால்வாய் மேலே உள்ள நடைபாதை உடைந்து சேதமாகி விட்டது. உடைந்த நடைபாதையை சரி செய்ய இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து உடைந்த நடைபாதையை சீரமைக்க முன்வர வேண்டும். அந்தக் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகர்சாமி, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 10:01 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#18578

துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிகழிவுநீர்

காட்பாடி காந்திநகர் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே செல்லும் சாலை ஓரம் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் குப்பைகள் மற்றும் இறைட்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் கடுமையாக வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்து அங்கு குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 9:58 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#18577

கோவில் உள்ளே குப்பைகளை அகற்றுவார்களா?

கோவில் உள்ளே குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோவிலின் உள்பிரகார வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. ேமலும் குப்பைகள் குவிந்து பராமரிப்பின்றி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவார்களா? -அருண், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 6:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#18570

சாலையில் தேங்கும் தண்ணீர்

சாலை

திருப்பத்தூர் புதுப்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி, பந்தாரப்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் தண்ணீர் மற்றும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் கழிவுநீர், தண்ணீர் மீது செல்லும்போது அதன் அருகிலும், எதிரேயும் வரும் வாகனங்கள் மீதும் நடந்து செல்லும் மக்கள் மீதும் தெளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சாலையில் தேங்கும் தண்ணீர்ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 6:23 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18569

விளையாட்டு உபகரணங்கள் பழுது

விளையாட்டு உபகரணங்கள் பழுதுமற்றவை

ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த சிறுவர் பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. அதைச் சரி செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்வார்களா? -சங்கர், ப.முத்தம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 6:21 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#18568

சுகாதாரமற்ற ஏ.டி.எம்.மையம்

சுகாதாரமற்ற ஏ.டி.எம்.மையம்மற்றவை

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளது. சுகாதாரமற்ற ஏ.டி.எம். மையத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அறிவழகன், உதயேந்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 6:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#18567

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆம்பூரை அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் செல்கின்றனர். மின்வாரியத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரியவிட வேண்டும். -ஜோசப், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick