Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Oct 2022 12:12 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#20124

கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புகள் சேதம்

கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புகள் சேதம்சாலை

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் சரிந்து விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் உள்ள தடுப்புகளை சீர் செய்ய வேண்டும். -எஸ்.பிரபாகரன், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 12:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#20123

துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுது

துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதுமற்றவை

நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் புதுப்பேட்டை என்ற இடத்தில் கல்நார்சம்பட்டி அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே குடியிருப்புகளும், கடைகளும் உள்ளன. பாழடைந்துள்ள அக்கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும். -அன்பு, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#20117

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் கணபதி தெரு அருகே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ரோட்டில் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 11:45 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#20111

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் நேதாஜி ரோடு மற்றும் அரசு மருத்துவமனை அருகே நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இரவில் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#20101

ராணிப்பேட்டைக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

ராணிப்பேட்டை நகரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. ராணிப்பேட்டையிலும், அதைச் சுற்றி உள்ள பல கிராமங்களிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ராணிப்பேட்டை அருகிலேயே சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இத்தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். புகழ் பெற்ற 'பெல்' நிறுவனமும் அப்பகுதியில் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ராணிப்பேட்டையில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கு செல்வதென்றாலும், சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வருவது என்றாலும், போதுமான...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#20099

பெயர் பலகையை சரி செய்து வைக்க வேண்டும்

பெயர் பலகையை சரி செய்து வைக்க வேண்டும்மற்றவை

வாலாஜா பஸ் நிலையம் அருகில், சென்னை, சோளிங்கர் செல்லும் வழிகளின் தூர அளவுகளை குறிப்பிடும் வழிகாட்டி பலகை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பலகையின் அடிப்பகுதி முறிந்து, பலகை கீழே விழுந்தது. பலகையின் அடிப்பகுதி தானாகவே முறிந்து விழுந்ததா? அல்லது நடைபாதை வியாபாரிகள் தங்களின் வசதிக்காக பலகையை உடைத்து கீழே தள்ளினார்களா? என்ன சந்தேகமாக உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் இதனை சரி செய்யாமல் மெத்தனமாக உள்ளனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் தடுமாற்றம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20098

மோட்டார்சைக்கிள்களால் போக்குவரத்து நெரிசல்

மோட்டார்சைக்கிள்களால் போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

கண்ணமங்கலம் புதிய சாலை பஸ் நிறுத்தம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை வங்கி முன்பு சாலையிலேயே நிறுத்தி விடுவதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வங்கி சார்பில் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த, தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். -கல்யாணசுந்தரம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 11:22 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#20097

தடுப்புகளை அகற்ற வேண்டும்

தடுப்புகளை அகற்ற வேண்டும்மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையம் முன்பு சற்று தொலைவில் தடுப்புகள் அமைத்துள்ளதால். அந்த இடங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்துவதால் வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், கையில் பைகள் மற்றும் குழந்தைகளை அழைத்து வரும் பெண்கள் டிக்கெட் வாங்கும் இடத்துக்கு செல்ல கஷ்டப்படுகின்றனர். மேலும் அந்த வழியிலேயே பொதுமக்கள் செல்ல முடியாத படி ஆட்டோக்களை நிறுத்தி வைக்கின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தடுப்புகளை அகற்றியும், ஆட்டோ நிறுத்தத்துக்கான இடம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:14 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#20096

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமற்றவை

ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதியில் உள்ள ஏலகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த சில நாட்களாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்தனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர். -ரவி, நிலாவூர் ஏலகிரிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#20094

வெவ்வேறு மணி காட்டும் கடிகாரங்கள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாக நுழைவு வாயிலில் காந்தி சிலை மண்டபத்தில் மேல் புறத்தில் 3 திசைகளில் பக்கத்துக்கு ஒன்றாக 3 கடிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு கடிகாரமும் ெவவ்வேறு நேரங்களை காட்டுகின்றன. உடனடியாக 3 பக்கங்களிலும் ஒரே நேரத்தை காட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20092

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டிதண்ணீர்

கண்ணமங்கலம் பேரூராட்சி சந்தைமேட்டில் பழைய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பாழடைந்த நிலையில் உள்ளது. எந்த வித பயன்பாடும் இல்லாத அந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபத்தான நிலையில் உருக்குலைந்து காணப்படுகிறது. அந்தத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிைய இடித்து விட்டு, நூலகமோ அல்லது வணிக வளாகமோ கட்டினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நடவடிக்கை எடுப்பார்களா? -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#20090

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி பிரதான சாலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள சிமெண்டு மின் கம்பம் ஆபத்தான நிலையில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேந்தர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick