Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jan 2023 2:30 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#26249

பத்திரப்பதிவு முறைப்படுத்தப்படுமா?

மற்றவை

செங்கம்-போளூர் ரோடு ராஜவீதி தெரு சந்திப்பில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளர் கடந்த சில வருடங்களாக பணியமர்த்தப்படாமல் உள்ளதாக தெரிகிறது. அங்கு பொறுப்பு சார்பதிவாளர் பணியில் உள்ள நிலையில் காலை 11 மணிக்கு மேல் பத்திரப்பதிவு தொடங்கி இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை நடக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் டோக்கன் முறையை மீறி சிலருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. பத்திரப்பதிவை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 2:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#26248

சேதமான கழிவுநீர் கால்வாய்

சேதமான கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

கண்ணமங்கலம் பெருமாள்கோவில் தெருவில் பள்ளிக்கூட பஸ் உரசி கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சேதமான கால்வாயை சரி செய்ய வேண்டும். குறுகலான தெருக்களில் பள்ளிக்கூட பஸ் வருவதை தவிர்த்து, மெயின்ரோடு பகுதியில் நிறுத்தி மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.-கண்ணன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 2:27 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#26247

நிழற்குடையை சீரமைத்து தருவார்களா?

நிழற்குடையை சீரமைத்து தருவார்களா?மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் எதிரில் காஞ்சீபுரம், வெம்பாக்கம், சென்னை, வேலூர் செல்ல பயணிகள் நிழற்குடை இருந்தும் அமர முடியாத நிலை உள்ளது. பயணிகள் அமரும் வகையில் நிழற்குடையை சீரமைத்துத் தருவார்களா?-வம்சி, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 4:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#25894

உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை

உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

கண்ணமங்கலம் புதுப்பேட்டை காட்டுக்காநல்லூர், கொளத்தூர் சாலைகள் பிரியும் சந்திப்பில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.5 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் மின் விளக்குகளை எரிய விட்டனர். தற்போது உயர் கோபுர மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. எனவே கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உயர் கோபுர மின் கம்பத்தில் மின் விளக்குகளை ஒளிர விட வேண்டும்.-சுப்பிரமணியம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#25893

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்மற்றவை

ஆரணி ஆரணிபாளையம் கே.கே. நகர், கே.சி.கே.நகர் பகுதியில் இருந்து பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய பெரிய அகலமான கால்வாய் உள்ளது. அதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லை. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும். -ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#25892

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பறையம்பட்டு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதை இன்னும் திறக்காமல் பூட்டியே வைத்துள்ளனர். கிராம மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை அதிகாரிகள் திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?-குருமூர்த்தி, பறையம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#25891

குடிநீர் கிணறுக்கு மூடி போடுவார்களா?

குடிநீர் கிணறுக்கு மூடி போடுவார்களா?தண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. ஏரி அருகே குடிநீர் கிணறு உள்ளது. அதில் இருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் குடிநீர் கிணறு இருப்பதால் அசுத்தம் அடைகிறது. குப்பைகள் பறந்து வந்து கிணற்றில் விழுகிறது. குடிநீர் மாசு அடைகிறது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர் கிணறுக்கு மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-முருகன், கல்லேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 4:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#25889

வாகனங்களால் இடையூறு

வாகனங்களால் இடையூறுமற்றவை

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு அதிகமான கடைகள் உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமமாக இருக்கிறது. இதுபோக நடைபாதையில் கடைக்காரர்கள் ஒரு சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்துகின்றனர். இதனால் மீன் வாங்க வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழியில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25819

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

பேரணாம்பட்டு சந்தாகுட்டை பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே ஒரு தெரு மின்விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:02 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#25818

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அருகே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:55 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#25817

மலைபோல் தேங்கும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் கிராமத்தைெயாட்டி பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் அடியில் திருப்பத்தூர் நகர பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பாலத்தின் அடியில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் மலை போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், ஏற்கனவே குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-லோகநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 1:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#25816

கிடப்பில் போடப்பட்ட குடிநீர் தொட்டி

கிடப்பில் போடப்பட்ட குடிநீர் தொட்டிதண்ணீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் ஸ்ரீராம் நகர், அரக்கோணம் சாலை, ஆஞ்சநேயர் காலனி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டது. அந்தத் தொட்டி சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick