Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 March 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#29340

பள்ளத்தை முறையாக மூடுவார்களா?

சாலை

ஆற்காடு பஜார் சாலையில் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் எடுத்தனர். ஆனால் பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் பள்ளத்தை முறையாக மூடினால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-வெங்கட்ராமன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#29335

நூலகம் திறக்கப்படுமா?

நூலகம் திறக்கப்படுமா?மற்றவை

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாபேட்டையில் உள்ள நூலகம் பல மாதங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிக்ள பயன்பெற நூலகத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-குபேரன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#29330

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

சோளிங்கர் நகராட்சி உட்பட்ட 27 வார்டுகளிலும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவுக்கும் 10 முதல் 20 நாய்கள் வரை சுற்றித்திரிகின்றன. சாலைகளில் செல்லும் வாகனகளை விரட்டிச்சென்று கடிப்பதும், துரத்துவதுமாக உள்ளது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் பயன் இல்லை. நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#29328

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிதண்ணீர்

அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் கிராமம் நடுத்தெருவுக்கு செல்லும் குடிநீர் குழாய் துருபிடித்து உடைந்து, பல மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறி குளம்போல் தேங்கி நின்றது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி ெதரிவித்தனர்.-முத்துசாமி, வளர்புரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#29327

இருக்கை வசதி தேவை

மற்றவை

கலவை பிராமணர் தெருவில் உள்ள ஒரு அரசு வங்கியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகைக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. பணத்தைப் ெபற வருவோர் வங்கியின் வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கின்றனர். இதனால் வயது முதிர்ந்தவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது ஒரு சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்து விடுகிறார்கள். சிலருக்கு தலைச்சுற்றல் வருகிறது. எனவே உதவித்தொகை ெபற வருவோருக்கு வங்கியின் உள்ளே அல்லது வெளியே இருக்கை வசதி அமைத்துக் கொடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#29324

கழிப்பறையை தேடி அலையும் நிலை

கழிப்பறையை தேடி அலையும் நிலைமற்றவை

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. வேலூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் சாலையில் பயணிகள் நிற்கும் இடத்தில் ஊராட்சி சார்பில் கழிவறை வசதி குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பலகையில் கழிவறை எங்கு உள்ளது என்ற விவரம் குறித்த அறிவிப்பு இல்லை. இதுகுறித்து அறிவிப்பு பலகை வைத்தவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜெயசீலன், சந்தவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29323

மின் கம்பம் சேதம்

மின் கம்பம் சேதம்மின்சாரம்

ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தில் மந்தவெளி பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தின் முன்பக்கமாக அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் சேதம் ஏற்பட்டு இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஒரு சிறிய காற்று அடித்தாலும் மின் கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின் கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.-ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#29322

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெருவுக்கு செல்லும் வழியான தேசிய நெடுஞ்சாலை ஆரம்ப பகுதியில் பூக்கடைகள், பழக்கடைகள் மற்றும் விளம்பர பேனர்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு இடையூறாக வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், கல்பூண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#29320

சாலையை சரி செய்ய வேண்டும்

சாலையை சரி செய்ய வேண்டும்சாலை

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பட்டு கிராமத்தில் இருந்து அத்திமூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்தச் சாலையில் செல்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வரதராஜன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29319

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்தில் பழைய ரோட்டில் செல்லும் சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக லாரிகள் நிறுத்துவதால் அந்த வழியே செல்பவர்கள் வழி தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கண்ணமங்கலம் புதிய சாலையில் வாகனங்களை போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படும் வகையில் நிறுத்துவதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவசுப்பிரமணியம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#29312

தார் சாலை பழுது

தார் சாலை பழுதுசாலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூரில் இருந்து ராசம்பட்டி செல்லும் தார் சாலை பழுதடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 4:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29310

ஏ.டி.எம். வசதி வேண்டும்

மற்றவை

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் அவசரத்துக்கு பணம் எடுப்பதற்கு ஒரு ஏ.டி.எம். மையம் கூட இல்லை. இதனால் பயணிகள் பணம் எடுப்பதற்கு கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வரும் சூழ்நிலை உருவாகிறது. எனவே வங்கி அதிகாரிகள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.ஜோதி, கொசப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick