Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 May 2023 12:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32189

செடி, கொடிகளை அகற்றுவார்களா?

செடி, கொடிகளை அகற்றுவார்களா?மின்சாரம்

பேரணாம்பட்டு வீ.கோட்டா சாலையில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மரை இயங்குவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது செடி, கொடிகளில் மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32188

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் வள்ளலார் பகுதியில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட பூங்கா உள்ளது. இங்குள்ள பெரிய மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் காற்றில் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பட்டுப்போன மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பாரதிராஜா, வள்ளலார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32185

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் அண்ணாசாலையில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் சாலையோரத்தில் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்தாஸ், வேலுர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32092

குடிநீர் வழங்கப்படுமா?

குடிநீர் வழங்கப்படுமா?தண்ணீர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மாத கணக்கில் இந்தக் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வருவதில்லை எனப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீர் இல்லாததால் அவதி அடைகின்றனர். எனவே கோவில் நிர்வாகத்தினர் குடிநீர் குழாயில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திருக்குமரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#32090

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு பகுதியில் பழைய ஆம்பூர் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கிடக்கின்றன. இதனால் கால்வாய் தூர்ந்துபோய் கழிவுநீர் ஓடாமல் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. கால்வாயை தூர்வாரக் கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32089

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர் பில்டர்பெட் ரோடு சார்ப்பனாமேடு பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இதனால் சிரமம் அடைந்துள்ளனர். கால்வாயில் இருந்து தூர்வாரப்படும் மண்ணும் குப்பையோடு சேர்த்து கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#32088

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

பேரணாம்பட்டு பங்களாமேடு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பகல் நேரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க வேண்டும். மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#32086

ஊராட்சி பணியாளர்களே குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் உள்ள தில்லை நகர் பகுதியில் ஊராட்சி பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும் அவர்களே அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சி பணியாளர்கள் குப்பைகளை எரிக்காமல் தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், தில்லை நகர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32080

வாகன நிறுத்துமிட வசதி தேவை

மற்றவை

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள அரசு வங்கி, வட அக்ரகார தெருவில் உள்ள அரசு வங்கி, மெயின் ரோட்டில் உள்ள அரசு வங்கி, தனியார் வங்கி உள்ளிட்ட எந்த வங்கிகளுக்கும் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் நடு ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கும், பள்ளிகளுக்கும் செல்ல முடியவில்லை. உடனடியாக வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர மேற்கண்ட வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#32076

பயணிகள் நிழற்குடை சேதம்

பயணிகள் நிழற்குடை சேதம்மற்றவை

திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.-ம.உமாராணி, நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32073

மேம்பாலங்களை சுத்தம் செய்ய வேண்டும்

மேம்பாலங்களை சுத்தம் செய்ய வேண்டும்சாலை

திருப்பத்தூரில் தர்மபுரி மெயின்ரோடு மேம்பாலம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு மேம்பாலம் உள்ளது. இந்த 2 மேம்பாலங்களில் ஏராளமான கற்கள், குப்பைகள், மண் குவியல் ஆகியவைகள் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. கண்களில் தூசு விழுகிறது. ஜல்லிக்கற்கள் வாகன டயர்களை பதம் பார்க்கின்றன. மேம்பாலங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.மூர்த்தி, செவ்வாத்தூர்-புதூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#32069

இரவில் அரசு பஸ் இயக்கப்பட வேண்டும்

போக்குவரத்து

ஆற்காடு முதல் தலங்கை ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த தனியார் பஸ் இரவில் ரெயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக கரடிகுப்பத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுவதுடன், வெகுதூரம் நடந்து வர சிரமமாக உள்ளது. எனவே மேற்கண்ட மார்க்கத்தில் இரவில் அரசு பஸ் இயக்கப்பட வேண்டும்.-ஏழுமலை, தலங்கை ரெயில் நிலையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick