Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 May 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#32067

ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், குப்பைகள்

குப்பை

நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கோழி இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியின் வழியே செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நெமிலி பேரூராட்சி குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுகிறது. இது சம்பந்தமாக புகார் அளித்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சாந்தி பாண்டியன், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32056

பஸ் நிலைய பின்புற தெருவில் பஸ்கள் விடப்படுமா?

போக்குவரத்து

வாலாஜா பஸ் நிலையத்துக்கு திருத்தணி, சோளிங்கர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் அனைத்து வகை வாகனங்கள் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு வழியாக பஸ் நிலையம் உள்பகுதியில் வர வேண்டும். அப்படி வந்தால் தான் வாகன மற்றும் மக்கள் நெரிசல் குறையும். இதுகுறித்து போலீசார் தக்க நடவடிக்கை மேற்கொள்வார்களா?-வெங்கடாசலம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32050

நடைபாதை ஆக்கிரமிப்பு

சாலை

வாலாஜா மெயின் பஜாரில் உள்ள நடைபாதை முழுவதும் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் முழு ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர ேவண்டும்.-நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#32045

காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் தொட்டிகள்

காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் தொட்டிகள்தண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம். அங்குள்ள கோவில் தெரு, கிழக்கு வீதி, தச்சம்பட்டு சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒருசில இடத்தில் குடிநீர் தொட்டி பராமரிக்காமல் உள்ளது. ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுதாகி உள்ளது. இதனால் குடிநீர் தொட்டிகள் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. சிறு மின்விசை தொட்டியை சீரமைத்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.-அஜித், தலையாம்பள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#32042

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆரணிைய அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பாக சாலையோரம் உள்ள கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததாலும், கால்வாய் சரிவர இல்லாததாலும் கழிவுநீர் எந்த நேரமும் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. கால்வாய்களை முறையாக தூர்வார மாவட்ட நிர்வாகம் ஆரணி நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.-ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#32036

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது சின்னகல்லபாடி. அங்குள்ள மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் ெசய்யப்படுகிறது. ஒரு வளைவு பகுதியில் கடந்த சில மாதங்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும்.-சிவா, சின்னகல்லபாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#32033

பயணிகளுக்கு இடையூறு

மற்றவை

கண்ணமங்கலம் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகளுக்காக நகைக்கடை அதிபர் ஒருவா் ஓலைக்கொட்டகையை இலவசமாக கட்டி உள்ளார். அதில் பயணிகள் நிற்க வேண்டிய இடத்தில் தள்ளு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நிற்க இடமில்லாமல் வெயிலில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-காசிநாதன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#32031

புதிய சாலையில் வடிகால் வசதி தேவை

புதிய சாலையில் வடிகால் வசதி தேவைசாலை

கண்ணமங்கலம் புதிய சாலை, பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழைநீர் சாலையோரம் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் புதிய சாலையோரம் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.-கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#31858

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

பேரணாம்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குரங்குகள் மின்ஒயர்கள் மீது ஏறி செல்வதால் மின்சாரம் தடைபடுகிறது. ஒயர்கள் அறுந்து விடுகிறது. வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31856

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜே.பி.சாலையில் மாநகராட்சி பூங்கா அமைத்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெரு சாலை முழுவதும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.பிலோமினா ஆஸ்டின், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#31855

அரசு பஸ்கள் முறையாக இயக்கப்பட வேண்டும்

போக்குவரத்து

குடியாத்தம்-ஆம்பூர் இடையே ஒருசில அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படுவது இல்லை. இதுகுறித்து ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் அரசு பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31854

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதுபோக, வாகன ஓட்டிகள் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதால் அங்கு நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.-கிருஷ்ணகுமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick