Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36669

சீராக தண்ணீர் வினியோகம் செய்வார்களா?

தண்ணீர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் பொதுக்கிணறு மோட்டாரின் மின் இணைப்பு ஒயர் அறுந்து கீழே தொங்கியது. அதிகாரிகள் அதனை சரி செய்யாமல் ஒயரை துண்டித்து விட்டனர். இதனால் தற்போது தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. மின் இணைப்பை சரி செய்து சீராக தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மு.மணி, வி.சி.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#36609

எரியாத மின் விளக்குகள்

எரியாத மின் விளக்குகள்மின்சாரம்

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் முதல் ஜோதிநகர் வரையில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் இருக்கும் மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. கடைகள் மூடியதும் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரசேகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#36608

பாழடைந்த கிணற்றை மூட வேண்டும்

மற்றவை

கலவை பேரூராட்சி 15-வது வார்டு புதிய காலனியில் தனியார் பள்ளி அருகே சாலையோரம் பாழடைந்த கிணறு ஒன்று பல நாட்களாக உள்ளது. அது, பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் உள்ளது. கிணறை மூடுமாறு பல முறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், விவசாயத்துக்கு செல்லக்கூடிய கூலித்தொழிலாளர்கள் செல்கிறார்கள். ஆடு மாடுகளும் செல்கின்றன. ஆபத்து ஏற்படும் முன் பயனற்ற பாழடைந்த கிணறை மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#36607

செயல்படாத மழைநீர் அளவுமானி

செயல்படாத மழைநீர் அளவுமானிமற்றவை

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், காவலூர் ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை, வனத்துறை, வருவாய்த்துறை மூலம் முக்கிய அலுவலகங்களில் நுழைவுப் பகுதியில் மழைநீர் அளவுமானி, வெப்பம் அளவுகோல் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் செயல்படாத நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தோராயக் கணக்கை அளவில் வைத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை அளவு அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வனத்துறை அலுவலகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#36606

எரியாத மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூர் டவுன் பெரியகம்மவார் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#36602

குடிநீர் தொட்டியையொட்டி வளர்ந்த மரக்கன்றுகள்

குடிநீர் தொட்டியையொட்டி வளர்ந்த மரக்கன்றுகள்தண்ணீர்

வந்தவாசி-அச்சரப்பாக்கம் சாலையில் காவல் குடியிருப்பு பகுதியில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியையொட்டி அரமரம் வளர்ந்துள்ளது. அரசு பல லட்சங்கள் ரூபாய் செலவு செய்து கட்டிய குடியிருப்பு சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆதலால் பொதுப் பணித் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருளானந்தம், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36599

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆரணிைய அடுத்த சேவூர் புதிய காலனி, ராட்டினமங்கலம் காலனி இணைப்பு பகுதியில் கால்வாயை தூர்வாராததால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து 2 ஊராட்சி நிர்வாகமும் இணைந்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜமாணிக்கம், சேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#36596

பகலில் எரியும் உயர்கோபுர மின்விளக்குகள்

பகலில் எரியும் உயர்கோபுர மின்விளக்குகள்மின்சாரம்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது வெறையூர் கிராமம். அந்தக் கிராமத்தில் இரவில் போடப்படும் மின்விளக்குகள் காலை விடிந்ததும் அணைப்பது இல்லை. பகலிலும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. பகலில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதால் அடிக்கடி பழுதாகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் மின் விளக்குகளை அதிகாலை நேரத்தில் நிறுத்த வேண்டும்.-சிவா, வெறையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#36595

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோட்டில் திருச்சி, சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ்கள், கார், லாரிகள் என ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆடுகள், மாடுகள் மெயின் ரோட்டில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36589

தவறான வரைபடம்

மற்றவை

கண்ணமங்கலம் அருகில் உள்ள ஆரணி தாலுகாவைச் சேர்ந்த அத்திமலைபட்டு கிராமத்தில் 4-வது வார்டு புதுத்தெருவில் 5 ஆண்டுகளாக வரைபடம் தவறாக உள்ளது. இதனால் எந்த ஒரு நபரும் நத்தம் பட்டா வாங்க முடியவில்லை. பத்திரப்பதிவும் செய்ய முடியவில்லை. இது பற்றி ஏற்கனவே வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் 5 முறை அளவீடு செய்தனர். அளவீடு செய்தும், இன்னும் சரி செய்யாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து வரைபடம் திருத்தம் செய்து கொடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 12:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#36480

சூதாட்டத்தை தடுப்பார்களா?

மற்றவை

ஆற்காட்டில் காட்டன் சூதாட்டம், 3 சீட்டு ஆகியவை அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தினசரி கூலி வேலைக்குச் சென்று திரும்பும் நபர்கள் இந்த சூதாட்டத்தில் அன்றைய தினம் வாங்கிய கூலியை கட்டி ஏமாறுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் இல்லத்தரசிகள் வெளியில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அவ்வாறு பெற்று கடனை திருப்பி கட்ட முடியாமல் பல குடும்பங்கள் கடன் காரர்களுக்கு பயந்து ஊரை விட்டு ஓடக்கூடிய ஒரு சூழலும் உருவாகிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 12:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36479

தார்சாலை அமைக்க வேண்டும்

சாலை

வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. சாய்பாபா கோவில் அருகில் சில இடங்களில் சில மாதங்களாக மழைப்பெய்ததால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளங்களால் சிரமப்படுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளை ஒரே சீராக சமன்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick