Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2023 12:51 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#36702

பழுதான சிறு மின்விசை தொட்டி

பழுதான சிறு மின்விசை தொட்டிதண்ணீர்

ஆவூர் ஊராட்சி கல்லறைமேடு பகுதியில் உள்ள சிறு மின் விசை தொட்டி, ஆழ்துளை கிணறு பல மாதங்களாகப் பழுதடைந்து பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ளது. சிறு மின் விசை தொட்டியை பழுது நீக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஏசுராஜ், ஆவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:48 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#36700

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். கோவில் அருகில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் உள்ள தெருவிலும், வட மற்றும் தென் ஒத்தவாடை தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#36697

அசுத்தமாக காணப்படும் சுகாதார வளாகம்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அலுவலக வேலை நாட்களில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் பொதுச்சுகாதார வளாகம் கட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36696

ரேஷன் கடை அமைப்பார்களா?

ரேஷன் கடை அமைப்பார்களா?மற்றவை

ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் பயனற்றுக்கிடக்கும் வானொலி அறையை அகற்றி விட்டு, அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் அமைத்துத் தர வேண்டும் அல்லது ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் எனக் கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:23 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#36685

சுடுகாட்டுக்கு பாதை வசதி தேவை

சாலை

கே.வி.குப்பம் தாலுகா காளாம்பட்டு அடுத்த கெங்கசாணிகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்களுக்கு தனியாக சுடுகாடு உள்ளது. ஆனால் சுடுகாட்டுக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை. தனியார் விவசாய நிலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். தனியாரின் விவசாய நிலத்தைப் பொது வழியாகப் பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுடுகாட்டுப் பாதைக்காக இடம் விட சிலர் விருப்பம் தெரிவிக்கின்றனர். அரசு தரப்பில், அவர்களிடம் பேசி சுடுகாட்டுக்கெனப் பொதுப்பாதையைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். -வேல்முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36684

சுகாதார சீர் கேடு

சுகாதார சீர் கேடுகழிவுநீர்

வேலூர் அருகே ரங்காபுரம் பகுதியில் உள்ள ஓயாசிஸ் 2-வது தெருவில் சேதம் அடைந்துள்ள கழிவுநீர் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்ேகட்டை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமதாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36683

பாதை சீரமைக்கப்படுமா?

பாதை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் அருகே வள்ளலாரில் இருந்து பி.எப். அலுவலகம் செல்லும் வழியில் சிறு பாலம் உள்ளது. அந்தப் பாலத்தில் அருகில் உள்ள பாதை மண் சரிந்து குறுகலாக உள்ளது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு வசதியாக பாதையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-குழந்தைவேலு, வள்ளலார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36682

உடைக்கப்பட்ட மின்விளக்குகள்

உடைக்கப்பட்ட மின்விளக்குகள்மின்சாரம்

வேலூர் அருகே வள்ளலார் பகுதி பைபாஸ் சாலை மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவில் இருளில் சூழ்ந்து வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. புதிய மின்விளக்குகளை பொருத்துவார்களா?-மார்க்கப்பந்து, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36681

சாலையின் நடுவே உடைந்த மூடி

சாலையின் நடுவே உடைந்த மூடிசாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் வழியில் சிமெண்டு சாலை பணிகள் முடிந்த நிலையில், சாலையின் நடுவே உள்ள கால்வாய் மூடி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. உடைந்த கால்வாய் மூடியை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மகேந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36680

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜா போலீஸ் குடியிருப்பு பகுதி முதல் அம்மூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தென்றல் குடியிருப்பு பஸ் நிறுத்தம் வரை தினமும் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. மாடுகள் திடீரென சாலையில் திரும்பும்போதும், சாலையை கடக்கும்போதும் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகிறார்கள். நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.-முகேஷ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:09 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#36678

இரவில் பெண்களிடம் வழிப்பறி

மற்றவை

பனப்பாக்கத்தில் இருந்து பன்னியூர் செல்லும் சாலையில் இரவில் வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. கல்லூரி, வேலைக்கு சென்று இரவில் திரும்பும் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் வீடு திரும்ப ேவண்டி உள்ளது. அப்பகுதியில் இரவில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். மேலும் வழிப்பறியில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடித்து தண்டிக்க வேண்டும்.-ஆனந்தன், பன்னியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:07 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#36677

மேன்ஹோல் பள்ளம் சீரமைக்கப்படுமா?

மேன்ஹோல் பள்ளம் சீரமைக்கப்படுமா?சாலை

அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் பாப்பான்குளம் பகுதி, சுவால்பேட்டை சரோஜினி தெரு, தலைமை தபால் அலுவலக தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல், சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக உள்ளது. அந்த வழியாக சைக்கிள், மோட்டார்சைக்கிளில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழும் அவலம் நடக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மேன்ஹோல் பள்ளம் சீரமைக்கப்படுமா?-திலக்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick