Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2023 1:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37295

சேதமடைந்த சிறு பாலம்

சாலை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி துரைநகர் பகுதியில் தனியார் பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் சிறு பாலம் சேதமடைந்துள்ளது. அதில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்துள்ள சிறு பாலத்தை புதுப்பித்துத் தர வேண்டும். -கிருஷ்ணா, துரைநகர் பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 1:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#37293

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் சின்னகம்மவார் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -ராம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 12:48 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#37290

பயணிகள் அமர இருக்கை வசதி தேவை

மற்றவை

கலசபாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அமருவதற்கு கல், சிமெண்டு பலகைகள் எதுவும் இல்லை. அங்கு பஸ்சுக்காக நிற்கும் பயணிகள் கால் கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. பயணிகள் நிழற்குடையை சீரமைத்து, பயணிகள் அமருவதற்கு அதிகாரிகள் இருக்கை வசதி ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். -ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 12:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#37288

வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்மற்றவை

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் படவேடு சாலை செல்கிறது. வழியில் கொளத்தூர், குப்பம், ரேணுகாபுரம், காளசமுத்திரம், அனந்தபுரம் உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் இச்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஆபத்தான வளைவு உள்ள இடங்களில் குறிப்பாக ரேணுகாபுரம், குப்பம், புதுப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால், வேகத்தடை இருப்பது அடையாளம் தெரியாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை உள்ள இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#37287

சாய்வாக உள்ள மின்கம்பங்கள்

சாய்வாக உள்ள மின்கம்பங்கள்மின்சாரம்

செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மெயின் ரோடு, போளூர் ரோடு வரை சாலையின் நடுவே தடுப்புச் சுவர்களையொட்டி உயர் கோபுர மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்த உயர் கோபுர மின்விளக்கு கம்பங்கள் மீது சரக்கு லாரிகள் உரசி செல்வதால் சாய்வாக கீழே விழும் நிலையில் உள்ளது. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய பஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு கம்பங்கள் சாய்வாக உள்ளன. அதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 12:43 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#37285

குடிநீர் நிலையம் செயல்படுமா?

தண்ணீர்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியின் சுடுகாட்டில் தானியங்கி நீரேற்றும் நிலையம் (1 ரூபாய் நாணயம் செலுத்தி 5 லிட்டர் குடிநீர் பெறும் நிலையம்) உள்ளது. அந்த நிலையம் 4 மாதங்களாகச் செயல்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு நீரேற்றும் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். -எல்.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 12:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37283

கால்வாய் மூடி மீண்டும் உடைந்தது

கால்வாய் மூடி மீண்டும் உடைந்ததுகழிவுநீர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பாதையில், ஏற்கனவே கால்வாய் மூடி உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் கழிவுநீர் கால்வாய் மூடி உடைப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்களின் சக்கரங்கள் இந்தப் பள்ளத்தில் சிக்கக் கூடிய நிலை இருப்பதால், கால்வாய் மூடியை தரமாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37280

செல்போனில் பேசியபடி செல்லும் வாகன ஓட்டிகள்

செல்போனில் பேசியபடி செல்லும் வாகன ஓட்டிகள்மற்றவை

வேலூரில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் செல்போனில் பேசியபடி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டிச்செல்வோரை அடையாளம் கண்டு போலீசார் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 12:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37279

உடைந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

உடைந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?மின்சாரம்

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சென்னை பஸ்கள் வெளியே வரும் பாதையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதம் அடைந்துள்ளது. உடைந்த மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சார்லஸ், முத்துமண்டபம் வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37278

குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலாறு பாலத்தின் கீழே பொதுமக்கள் ஏராளமான குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்தக் குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்று விடுகின்றனர். அதில் இருந்து வரும் நச்சுப்புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37202

மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகள்

மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகள்மற்றவை

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் அருகில் ஆண், பெண்களுக்கான கழிவறைகள் உள்ளன. அந்தக் கழிவறைகள் தற்போது பூட்டியே கிடக்கின்றன. இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதிப்படுகின்றனர். பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறந்து விட வேண்டும். -ஆகாஸ், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#37191

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் செல்லும் சாலை மோசமாக உள்ளது. அந்தச் சாலை வழியாக உளியநல்லூர், துறையூர், கோடம்பாக்கம், பெரப்பேரி, மகேந்திரவாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனை, தனியார் கம்பெனிகளுக்கு செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பார்களா?-மோகன்ராஜ், பனப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick