Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2023 6:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#39494

புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு

மற்றவை

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கீழ்பள்ளிப்பட்டு அருகில் உள்ள மீராஸ்பேட்டை பகுதியில் கிராம நத்தம் புறம்போக்கு இருக்கிறது. அந்த இடத்தில் பொதுமக்கள், பக்தர்கள் பல ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த இடத்தை ஆக்கிரமித்து, பட்டா பெற முயற்சி செய்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.சாந்தி, கீழ்பள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 6:32 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#39493

ரேஷன் கடை முன்பு தேங்கிய மழைநீர்

ரேஷன் கடை முன்பு தேங்கிய மழைநீர்தண்ணீர்

அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அங்குள்ள ரேஷன் கடை எதிரே மழைநீர் வெளியேறாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயகிருஷ்ணன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 6:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#39492

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

ஆற்காடு பகுதியில் உள்ள பொதுப்பணி துறைக்குச் சொந்தமான கால்வாய்கள் மற்றும் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த அசுத்தமான கழிவு நீரை கடந்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. வரும் மழைக்காலம் என்பதால் ஆற்காட்டில் உள்ள பெரும்பாலான கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் தூர் வார வேண்டும். -கணேசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 6:02 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39491

விளம்பர போர்டுகள் ஆக்கிரமிப்பு

மற்றவை

வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை பஸ் நிறுத்தம் முதல் பழைய தேரடி வரை அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர போர்டுகள் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை, வாலாஜா நகராட்சியும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் இணைந்து அகற்ற முன்வர வேண்டும். -நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 6:00 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#39490

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

கலவை-திமிரி செல்லும் சாலையில் கலவை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது கலவை-திமிரி சாலையில் வாகனங்கள் செல்வதால் மருத்துவமனையில் வரும் நோயாளிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அரசு மருத்துவமனை அருகே 2 வேகத்தடை அமைக்குமாறு நெடுஞ்சாலைத் துறையை கேட்டுக் கொள்கிறோம். -உமா, சமூக ஆர்வலர், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#39476

பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவைமற்றவை

கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முழுமையாக சுற்றுச்சுவர் இல்லை. ஏற்கனவே இருந்த சுற்றுச்சுவர் விழுந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதன் ஒரு பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் பழுதடைந்துள்ளது. இரவில் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், மேல்மாயில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 6:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39474

வேகத்தடை சரி செய்யப்படுமா?

வேகத்தடை சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்பக்கம் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு செல்லும் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் சில பகுதியை மட்டும் அகற்றி விட்டு அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையை சரி செய்வார்களா? -மாதவன், வேலூர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#39469

தார் சாலை போடுவது எப்போது?

தார் சாலை போடுவது எப்போது?சாலை

லத்தேரியை அடுத்த பகவதிபுரம், சிவன் கோவில் தெருவில் ஜல்லிக்கற்கள் பரப்பி வைத்து அப்படியே விடப்பட்டுள்ளது. அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கால்களை ஜல்லிக்கற்கள் குத்தி பதம் பார்க்கின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களிலும் பழுது ஏற்படுகிறது. அதிகாரிகள் தார் ஊற்றி சாலைப்பணியை முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணதாசன், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39468

உடைந்த சிமெண்டு சிலாப்

உடைந்த சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் வடக்கு காவல் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேல் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கர் சிலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு சிலாப் பெரிய அளவில் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39463

பயணிகளுக்கு இடையூறு

பயணிகளுக்கு இடையூறுமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சித்தூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் பயணிகள் நடந்து செல்லும் வழியில் இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரைக் கடை வியாபாரிகளும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை வைத்துள்ளனர். எனவே பஸ் நிலையத்தின் உள்ேள ேமாட்டார்சைக்கிள்களை நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடை விதிக்க ேவண்டும். -தருமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39458

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

திருப்பத்தூர் அப்பாத் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கடந்த 15 நாட்களாக வீணாக வெளியேறி வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39455

மின்கம்பத்தால் இடையூறு

மின்கம்பத்தால் இடையூறுமின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் தெருவின் நடுவே மின் கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது, சம்பந்தமாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும். -ந.உதயகுமார், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick