Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Dec 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43202

இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்

சாலை

வாலாஜாவை அடுத்த பெரிய தகர குப்பம் கிராமம் முதல் ஒழுகூர் வரை குறுகிய சாலையாக உள்ளது. அத்துடன் சாலை ஓரங்களில் கேபிள் ஒயர்கள் புதைக்கப்பட்டு அவை சரிவர மூடப்படாமல் உள்ளது. சாலை ஓரங்களில் வாகனங்களை போட்டுச் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விபத்துகளை தவிர்த்திட இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், கேபிள் ஒயர் புதைக்கப்பட்ட இடம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். -விஸ்வநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43200

சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

சாலை

வாலாஜாவை அடுத்த ஒழுகூர் ஏரிக்கரை அருகில் குறுகிய சாலையோரம் பெரிய தரைக்கிணறு உள்ளது. அதில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் கிணறு இருப்பதே தெரியாமல் நிலத்தோடு நிலமாக உள்ளது. இந்த வழியாக பலர் சென்று வருகின்றனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கிணற்றில் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தரைமட்ட கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுமா? -பிரசாத், ஒழுகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#43197

நிழற்குடை அமைக்க வேண்டும்

மற்றவை

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்ததால் அகற்றப்பட்டது. பயணிகள் மரத்தடியில் பஸ்சுக்காகக் காத்திருக்கிறார்கள். வல்லம் ஊராட்சி நிர்வாகம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். -தேவராஜ், வல்லம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 4:58 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#43192

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் அனுமந்த கவுண்டர் தெரு, காவல் நிலைய வீதி, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களை துரத்துகின்றன. திடீரெனக் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்துகள் ஏற்படுகிறது. நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூரியா, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43191

சாய்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டி

சாய்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டிகுப்பை

திருப்பத்தூர் அருகே குறும்பகேரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராம சாலையோரம் குப்பைத்தொட்டி ஒன்று சாய்ந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் போட முடியாமல் சாலையோரம் வீசுகிறார்கள். எனவே சரியான முறையில் குப்பைத்தொட்டியை வைத்து, அதில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43187

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

திருப்பத்தூர் அருகே குறும்பகேரியில் திருப்பத்தூர் செல்லும் சாலையோரம் ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியை முறையாமல் பராமரிக்காமல் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#43184

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம், மேல்பட்டி வழியாக குடியாத்தம் செல்லும் சாலையில் குறைந்த எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர் பஸ்களின் பின்னால் உள்ள ஏணியில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மேற்கண்ட மார்க்கத்தில் காலை, மாலை வேளையில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஞானபிரபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43182

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே கொல்லக்கொட்டை கிராமத்தில் சாலை சேறும் சகதியுமாக மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். கொல்லக்கொட்டை கிராமத்துக்கு செல்ல முறையான சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிக்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43048

பயணிகளுக்கு இடையூறு

பயணிகளுக்கு இடையூறுமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கடைகளில் பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக பொருட்களை வழியில் வைத்துள்ளனர். கடை முன்பு மஞ்சள் நிற கோடு அமைத்து இதற்குள் பொருட்கள் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் வெளியே வைக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43046

பயணிகள் நிழற்கூடம் தேவை

மற்றவை

பாகாயம்-காட்பாடி மார்க்கத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அவுட்கேட் அருகில் கோட்டை தபால் நிலையம் எதிரே பயணிகள் நிழற்கூடத்தை அப்புறப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. அங்கு இதுவரை பயணிகள், நோயாளிகள் நிழலுக்கோ, மழைக்கோ ஒதுங்குவதற்கு கூட ஒரு கொட்டகை அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிகமாக பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிங்கானியா, மேற்கு வங்காளம், (வேலூர் முகாம்).

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43044

தினத்தந்திக்கு நன்றி

சாலை

வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரியம்மன் கோவில் தெரு சாலை பழுதடைந்திருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து, சாலையை சீர் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். -பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43042

சுகாதார நடவடிக்கை தேவை

சுகாதார நடவடிக்கை தேவைமற்றவை

வேலூர் பேரிபேட்டை காளியம்மன் கோவில் தெரு, பேரி பக்காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் காளியம்மன் கோவில், சாந்தி குரு கோவில் மற்றும் ஜெயின் துறவிகள் தங்கும் மடம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ஜெயின் துறவிகள் வருவார்கள். அவர்கள் காலணிகள் அணியாமல் நடப்பார்கள். இந்தப் பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியே வருகிறது. இதனை அவர்கள் கடந்து செல்வது கடினமாகிறது. நோய்பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்களும் பலர் அந்த தெருவை மிகவும் சிரமத்துடன் கடக்கின்றனர். எனவே இங்கு கழிவுநீர் வெளியே வராதவாறு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick