Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jan 2024 5:03 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43893

குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்

குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்குப்பை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 14-வது வார்டு அருணாசலநகரில் சரியாக குப்பைகளை சேகரிப்பது இல்லை. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.சந்தோஷ், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 4:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43884

கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?

கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?சாலை

வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே வெளிப்பகுதியில் உள்ள சாலையில் கட்டிட கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், மணல் குவியல் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குவியலாக கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 4:47 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#43879

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலையில். கிரிவலம் செல்லும் பக்தர்கள் கோவிலில் இருந்து திருவூடல் தெரு, செங்கம் சாலை வழியாக செல்கின்றனர். திருவூடல் தெருவும், செங்கம் சாலையும் இணையும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. கிரிவலம் செல்லும் கிரிவலப்பாதையில் டாஸ்மாக் கடையா? என்று பக்தர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். -மதன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 4:45 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#43878

சாலையோரம் குப்பைகளை எரிக்கும் அவலம்

சாலையோரம் குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகர எல்லைப் பகுதிகளான கமண்டல நாகநதி ஆற்றங்கரையிலும், ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை, முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை, தச்சூர் சாலை, சேத்துப்பட்டு-வந்தவாசி நெடுஞ்சாலைகள் ஓரமும் கொட்டி தீயிட்டு கொளுத்துகிறார்கள். அந்த வழியாகச் செல்வோர், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்ைபகளை எரிப்பதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். -ராகவேந்திரா, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 4:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#43877

புதிய கட்டிடங்களை திறக்க நடவடிக்கை

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளி உள்ளது. பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. ஆனால் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். அந்தக் கட்டிடங்களை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 4:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#43876

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலை

திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக திருவண்ணாமலை-போளூர் சாலை பகுதி, மத்தலாங்குளத் தெரு, மாட வீதி, திருவூடல் தெரு, தண்டராம்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சாலையில் மாடுகள் நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 4:39 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#43875

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகழிவுநீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது அல்லிக்கொண்டாபட்டு கிராமம். இங்குள்ள தேவாலயத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராமன், அல்லிக்கொண்டாபட்டு கிராமம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:56 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43741

பள்ளி கட்டிட பணிகள் நிறைவு பெறுமா?

பள்ளி கட்டிட பணிகள் நிறைவு பெறுமா?மற்றவை

கே.வி.குப்பம் ஒன்றியம் முருக்கம்பட்டு பஞ்சாயத்து மகமதுபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு பள்ளிக்கட்டிடம் கட்டும் பணி தொடங்கி இன்னும் நிறைவு பெறாமலும், மாணவர்களின் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடப்பணியை நிறைவு செய்வார்களா? -டி.ஜெயக்குமார், முருக்கம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:50 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43739

தூர்வாரப்படாத ஏரி

தூர்வாரப்படாத ஏரிமற்றவை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் எதிரில் உள்ள ஏரி 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராப்படாமல் உள்ளது. அந்த ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:46 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#43738

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டிதண்ணீர்

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லமங்கலம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டன. அந்தக் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், கொல்லமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:44 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43737

வால்வுக்கு மூடி போட வேண்டும்

வால்வுக்கு மூடி போட வேண்டும்தண்ணீர்

கே.வி.குப்பம் சந்தைமேடு அருகில் குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளது. அதற்கான வால்வு உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கும்படியாக உள்ளது. அந்த இடத்தை சற்று உயர்த்தி மூடி போட வேண்டும். -கிருஷ்ணமூர்த்தி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43736

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் தாயப்பன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துச்சாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick