Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jan 2024 6:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44097

புதிய குப்பைத்தொட்டிகள் ைவப்பார்களா?

குப்பை

திருப்பத்தூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி உடைந்துள்ளது. அங்கு அடுத்தடுத்துள்ள 2 குப்பைத்தொட்டிகள் பயனற்று கிடக்கின்றன. இதனால் குப்பைகள் வெளியே சிதறும் நிலை உள்ளது. எனவே புதிய குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -பூமிநாதன், தண்ணீர்பந்தல் கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 6:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44096

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து குரிசிலாப்பட்டு செல்லும் சாலையோரம் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், குரிசிலாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 6:00 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44095

சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்

சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன் பகுதியில் சுற்றுச்சுவர் உள்ளது. அதில் சிறிது தூரம் செங்கற்கள் உடைந்து காணப்படுகிறது. அதன் வழியாக கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் சென்று மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமதாஸ், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44094

பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

சாலை

வாலாஜாவில் வெங்கட்ரமண பாகவதர் தெரு, தொப்பை செட்டி தெரு, பெரிய மசூதி தெரு சந்திப்பில் குடிநீர் குழாயை சரி செய்ய தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. அந்தப் பள்ளத்தால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தோண்டிய பள்ளத்தை சரியாக மூட வேண்டும். -பிரபு, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:54 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44093

சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து

சாலை

வாலாஜா நகரத்தின் நுழைவு வாயிலான தேசிய நெடுஞ்சாலையின் முகப்பில் அம்மூர், சோளிங்கர் சாலைகளில் இருந்தும், திருத்தணி சாலையில் இருந்தும் ஏராளமான பஸ்கள், லாரிகள் வாலாஜாவுக்கு வருகின்றன. நுழைவு பகுதியில் இரவில் அதிகளவில் சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணித்து அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகேஸ்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#44092

கடைகள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் பழுதானதால் அதை இடித்து விட்டு புதிதாகக் கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி காணப்படும். எனவே கடைகள் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா? -தனசேகர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44089

மாடுகளால் போக்குவரத்துப் பாதிப்பு

மாடுகளால் போக்குவரத்துப் பாதிப்புமற்றவை

வேலூர் நகரில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிரீன் சர்க்கிள் பகுதியில் ஓய்வெடுக்கும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்துக்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44087

பாலம் சீரமைக்கப்படுமா?

பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

வேலூரை அடுத்த வள்ளலார் பகுதியில் இருந்து பி.எப். அலுவலகம் செல்லும் பாதையில் கால்வாய் மீது பாலம் உள்ளது. பாதி அளவு மட்டுமே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்ட நிலையில், மீதி பாதை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பழுதடைந்த பாலத்தை சீரமைத்து, முழுமையாக பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சிவலிங்கம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44080

கால்வாயில் கிடக்கும் குப்பைகள்

கால்வாயில் கிடக்கும் குப்பைகள்குப்பை

பேரணாம்பட்டு பகுதியில் குடியாத்தம் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி உள்ளது. தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தூர்வார வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#44058

சுத்தமில்லாத நிழற்குடைகள்

மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 இடங்களில் பயணிகள் ஓய்வெடுக்க நிழற்குடைகள் உள்ளன. அங்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. முதியவர்கள், பெண்கள் தரையில் அமருகிறார்கள். பஸ் நிலையத்தில் உள்ள 2 நிழற்குடைகளும் அசுத்தமாக உள்ளன. அங்கு சில சமயங்களில் நிற்கவும், அமரவும் முடியாமல் பொதுமக்கள், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#44055

தண்ணீர் வசதியில்லாத சுகாதார வளாகம்

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வேலை நாட்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் அருகில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சுகாதார வளாகத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராணி, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44053

தூர்ந்துபோன கால்வாய்

தூர்ந்துபோன கால்வாய்கழிவுநீர்

ஆரணியில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, மண்டி வீதி, பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலையில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுவதும் மணல், மண் நிரம்பி தூர்ந்து போய் உள்ளது. நகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் உதவிேயாடு கால்வாய்களில் உள்ள மண், மணலை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick