Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Feb 2024 5:48 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44446

கரிக்கல் மலை ஆக்கிரமிப்பு

மற்றவை

வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோட்டில் படவேட்டம்மன் கோவில் எதிரில் சுடுகாடு பக்கத்தில் கரிக்கல் மலை உள்ளது. இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பொழுதுப்போக்கு இடமாக 40 வருடங்களுக்கு முன்புவரை பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த மலையே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளதால் கரிக்கல் மலையே காணாமல் போனது. இதை வாலாஜா நகராட்சியும் கண்டு கொள்ளவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக மலைையயும், மலைக்குப் போகும் வழியையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#44431

எரிமேடை பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் எரிமேடை கட்டப்பட்டது. இந்த எரிமேடை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் மக்கள் பயன் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. எரிமேடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வமணி, சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#44420

தெருவில் ஓடும் கழிவுநீர்

தெருவில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாய் உடைந்ததால் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். கால்வாைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - உதயகுமார், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44419

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் காளியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் வெளியூருக்கு சென்று வருகின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பன்னீர்தாஸ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#44418

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் சின்ன கம்மவார் தெருவில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#44415

மின்கம்பியில் உரசும் மரக்கிளைகள்

மின்கம்பியில் உரசும் மரக்கிளைகள்மின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் மின் கம்பத்தில் உள்ள கம்பிகள், அருகில் இருக்கும் புளிய மரக்கிளையில் உரசிய படி செல்கிறது. காற்று வீசும்போது மின் கம்பிகள் உரசுவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ரமேஷ், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44414

சேதம் அடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

சேதம் அடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வகுமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:17 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#44411

கழிவுநீர் கால்வாயில் உடைப்பு

கழிவுநீர் கால்வாயில் உடைப்புகழிவுநீர்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் சாலையில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கால்வாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.மோகனம், விரிஞ்சிபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44402

கழிவுகளை அகற்ற வேண்டும்

கழிவுகளை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் கிடந்த குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44397

குப்பைகள் தீ வைத்து எரிப்பு

குப்பை

வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் பள்ளியின் பின் பக்க கேட் அருகில் 5-வது தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை எரிப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். -அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:53 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#44391

சாய்ந்த மின் கம்பம்

சாய்ந்த மின் கம்பம்மின்சாரம்

செங்கம் பேரூராட்சியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலமுருகன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:51 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#44390

எரிவாயு தகன மேடை வசதி

மற்றவை

கீழ்பென்னாத்தூர் தனி தாலுகாவாக உருவாகி 6 ஆண்டுகள் ஆகிறது. சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. கீழ்பென்னாத்தூரில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்ைல. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டி.தீனதயாளன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick