Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Feb 2024 5:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44630

பயனற்ற குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியில் பள்ளியின் அருகில் குப்பைத்தொட்டி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைத்தொட்டியை சரியான முறையில் வைத்து குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் திருப்பத்தூர் அருகே காக்கங்கரையில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் பயனற்ற முறையில் குப்பைத்தொட்டி உள்ளது. இந்தக் குப்பைத்தொட்டியை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வைத்து குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழரசன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44629

பழுதான சாலை

சாலை

திருப்பத்தூர்-பாச்சல் செல்லும் மேம்பாலத்தின் அருகில் இருந்து சின்னமூக்கனூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கஜேந்திரன், பாச்சல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:31 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#44626

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் விருதம்பட்டில் ெபரியார் திடல் மேடை அருகில் சாலையோரம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குடிநீர் வீணாக வெளியேறி அப்பகுதியில் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயின் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராமன், விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:29 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44624

தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி

தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

வேலூர் ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை உழவர் சந்தை அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், அப்பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் அவ்வப்போது நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு சாலைகளில் ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44623

வாகன கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

வாகன கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதிகுப்பை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பைபாஸ் சாலை ஓரத்தில் கால்வாய் பகுதியில், வாகனக்கழிவுகள் மற்றும் குப்பைகளை கடைக்காரர்கள் இரவில் தீவைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரந்தாமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44621

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் தங்கக் கோவிலுக்கு செல்லும் சாலையின் நடுவே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பள்ளம் உருவாகி தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க அந்தப் பள்ளத்தின் மேல் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மரக்கிளையை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும். -மாடசாமி, அரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:21 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#44618

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைப்பார்களா?

தண்ணீர்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவைக்காக பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. அந்த தொட்டியில் குழாய் இருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் அந்தத் தொட்டிகளில் தண்ணீர் பிடித்து குடிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே பஸ் நிலையத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:17 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#44615

உடைந்த கால்வாய் மூடி

உடைந்த கால்வாய் மூடிகழிவுநீர்

செங்கம் டவுன் பழைய பஸ் நிலையத்தில் நெல், மணிலா போன்ற பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் மண்டிகள் உள்பட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழைய பஸ் நிலையத்துக்கு உள்ளே வந்து வெளியே செல்வதற்கு 2 வழிகள் உள்ளன. அதில் ஒரு வழியில் கால்வாய் மூடி உடைந்துள்ளதால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் ஒரே வழியில் சென்று வர வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் சிரமமாக உள்ளது. உடைந்த கால்வாய் மூடியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரராஜன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#44608

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவில் குழந்தை முதல் முதியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும். -குமார், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:06 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#44601

சாலையோர மண் குவியலால் ஆபத்து

சாலையோர மண் குவியலால் ஆபத்துசாலை

வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்டுச்சாலையில் இருந்து மாமண்டூர், தூசி, அப்துல்லாபுரம் கூட்டுச்சாலை வரை மெயின் ரோட்டின் ஓரமாக மண், எம்.சாண்ட் மணல் குவியல் உள்ளது. கனரக வாகனங்கள் மாறி செல்லும்போது இருசக்கர வாகனம், சைக்கிள்களில் ஒதுங்கும்போது, மண் மற்றும் எம்.சாண்ட் மண் குவியலில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மண்ணில் சிக்கி சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர மண், மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -அப்துல், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#44592

கால்வாய் வசதி தேவை

மற்றவை

திருவண்ணாமலை நகராட்சி புதுவாணியகுல தெருவில் சிறு மின்விசை தொட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை. சாலையிலேயே கழிவுநீர் வழிந்தோடுகிறது. குடிநீர் தொட்டிக்கு அருகிலேயே கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.தண்டபாணி, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 5:53 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#44447

ஏ.டி.எம். எந்திரம் சரி செய்யப்படுமா?

மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு செல்லும் வழியில உள்ள ஒரு வங்கியின் பிரதான கிளை வளாகத்தில் பணம் செலுத்த மற்றும் எடுப்பதற்கான ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்து பல நாட்களாக பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம், ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? -கிருஷ்ணமூர்த்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick