Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Feb 2024 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44803

பாழடைந்த கட்டிடம்

பாழடைந்த கட்டிடம்மற்றவை

பாழடைந்த கட்டிடம்பாழடைந்த கட்டிடம்நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் பகுதியில் ஒருங்கிணைத்த மகளிர் சுகாதார வளாக கட்டிடம் உள்ளது. அது, 11 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல், பாழடைந்து, புதர்கள் மண்டி காணப்படுகிறது. அந்தக் கட்டிடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாரிமுத்து, நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44802

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மர்ம நபர்கள் இரவில் பள்ளியின் உள்ளே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளி சுற்றுச்சுவரை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44801

பயனற்ற குப்பைத்தொட்டி

பயனற்ற குப்பைத்தொட்டிகுப்பை

திருப்பத்தூர் அருகே பெருமாபட்டு பள்ளிக்கூடம் அருகில் குப்பைத்தொட்டி கவிழ்ந்த நிலையில் கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். குப்பைத்தொட்டியை சரியான முறையில் வைத்து குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44800

நிழற்கூடத்தில் பயனற்ற பொருட்கள்

நிழற்கூடத்தில் பயனற்ற பொருட்கள்மற்றவை

திருப்பத்தூர் அருகே டி.கிருஷ்ணாபுரத்தில் பயணிகள் நிழற்கூடம உள்ளது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் விறகு உள்ளிட்ட பயனற்ற பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். இதனால், பஸ் ஏற வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44799

குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்தண்ணீர்

திருப்பத்தூர் அருகில் பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் சிதிலமடைந்து, சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வருகிறது. விபரீதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44796

விளம்பர பலகையில் சுவரொட்டிகள்

மற்றவை

வாலாஜாபேட்டை நகராட்சியில் வார்டுகள் வாரியாக உள்ள தெருக்களில் வைக்கப்பட்டுள்ள தெரு பெயர் பலகைகள் மீது கண்ணீர் அஞ்சலி, ஆட்கள் தேவை உள்ளிட்ட விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதை நகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்வதே இல்லை. இவைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44795

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்கள்

மற்றவை

வாலாஜாபேட்டை நகர எல்லை ஆரம்பத்தில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேடை உள்ளது. இந்த மேடை மீது மரங்கள் வளர்ந்து பெரிதாக உள்ளன. மரங்களால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த மரங்களின் நிழலால் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள் வைத்து தொல்லை கொடுக்கின்றனர். அந்த 3 மரங்களை வெட்டி போக்குவரத்துக்கு பாதிப்பை சரி செய்ய வேண்டும். -சுப்பிரமணியம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:24 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#44794

மின் கம்பங்களில் கட்டியிருக்கும் கேபிள் ஒயர்

மின்சாரம்

அரக்கோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் கம்பங்களில் தொலைத்தொடர்பு கேபிள் ஒயர் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகளின் குறுக்கே கேபிள் ஒயர் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது சக்கரங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மின் கசிவால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் மற்றும் மின் வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகேஷ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44790

சரியாக எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

சரியாக எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்மின்சாரம்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பு உயர் கோபுரம் மின் விளக்கு உள்ளது. இந்த உயர் கோபுர மின்விளக்கில் ஒரு சில மின் விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மற்றவை சரியாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை சரி செய்து முறையாக எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44788

சாலையின் நடுவே பள்ளம்

சாலையின் நடுவே பள்ளம்சாலை

வேலூர் செங்காநத்தம் மலைக்கு செல்லும் வழியில் மூலக்கொல்லை பகுதியில் உடைந்து கிடக்கும் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தின் மேல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து ஏதும் நடக்காமல் இருக்க கல்லை வைத்துள்ளனர். அந்த வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் சாலையில் ஆங்காங்கே இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரமான சாலையை அமைத்து அந்தப் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், செங்காநத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:13 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#44787

தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும்

சாலை

வேலூர் மாநகராட்சி 2-வது வார்டு பகுதியில் தெருக்களில் ஒகேனக்கல் குடிநீருக்காக குழாய் பதிக்க சிமெண்டு, தார் சாலைகளில் பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் தெருக்கள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. தெருக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்ரீராமுலுரெட்டி, பெரியபுதூர். காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44785

தெரு நாய்கள் தொல்லை

தெரு நாய்கள் தொல்லைமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அந்த நாய்கள் தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெரு நாய்கள் தொல்லை-வித்யாதரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick