Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 March 2024 6:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45182

இருவழி சாலையாக மாற்ற வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் முதல் படவேடு வரை உள்ள சாலையை ஓ.டி.ஆர். என்பதை எம்.டி.ஆர். எனத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படவேடு, அனந்தபுரம், காலசமுத்திரம், குப்பம், கொளத்தூர் உள்பட 50 கிராமங்கள் பயன் அடையும் வகையில் இருவழிச்சாலையாக அமைக்க வேண்டும். -குமார், படவேடு.

மேலும்
ஆதரவு: 101
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:11 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#45181

தவறாக எழுதப்பட்ட பெயர் பலகை

தவறாக எழுதப்பட்ட பெயர் பலகைமற்றவை

வேட்டவலம் வழியாக செல்லும் மங்களூர்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையோரம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டி பலகையில் வேட்டவலம் அருகில் உள்ள ஊரின் பெயர் ‘அணுக்குமலை’ என்பதற்கு பதிலாக அனுகுமலை என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் வழிகாட்டி பலகையில் தவறுதலாக உள்ள ஊரின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை உடனடியாக சரி செய்வார்களா? -தனபால், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:09 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#45179

குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுது

குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதுதண்ணீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வார்டு மீனவர் தெருவில் உள்ள ஆழ்துளை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி நீண்ட நாட்களாக பழுதாகி உள்ளது. இதைச் சரி செய்ய பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் சரி செய்யாமல் உள்ளனர். வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வார்டு மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டி மற்றும் மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:06 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#45176

எரியாத உயர் கோபுர மின் விளக்கு

எரியாத உயர் கோபுர மின் விளக்குமின்சாரம்

போளூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் ரூ.3.5 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஒரு வருடம் எரிந்த உயர்கோபுர மின்விளக்கு தற்போது 6 மாதமாக எரியவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலர் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும். -ராஜ்குமார், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:02 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45174

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை நகரத்துக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். திருவண்ணாமலை நகரப் பகுதியில் காணும் இடமெல்லாம் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா,திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:00 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45172

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் கொடிக்கடியால் தூங்காமல் அவதிப்படுகின்றனர். நகரம், ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:58 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#45170

கால்வாயை முழுமையாக கட்ட வேண்டும்

கால்வாயை முழுமையாக கட்ட வேண்டும்கழிவுநீர்

கே.வி.குப்பம் பஸ்நிலையம் எதிரில் மேல்மாயில் சாலையோரம் கால்நடை மருத்துவமனை அருகில் மதுரைவீரன் கோவில் பக்கத்தில், கால்வாய் கட்டும்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை முழுமையாகக் கட்ட வேண்டும். -கிருஷ்ணபாலன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45169

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ. சாலையில் இருந்து சவுத் நியூ செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு எழுகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45166

பழுதாகி கிடக்கும் மின் விளக்குகள்

பழுதாகி கிடக்கும் மின் விளக்குகள்மின்சாரம்

வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து முடிந்தது. தற்போது அங்குள்ள ஒரு சில மின் விளக்குகள் பராமரிப்பின்றி தூசி அடைந்து எரியாமல் உள்ளது. கோட்டைக்கு தினமும் பொதுமக்கள் வருவதால் எரியாத மின்விளக்குகள் உள்ள பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் எரியாத மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -புண்ணியமூர்த்தி, கஸ்பா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45165

சிமெண்டு கால்வாய் மூடி சேதம்

சிமெண்டு கால்வாய் மூடி சேதம்கழிவுநீர்

வேலூர் அரியூர் ரெயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் உடைந்து சேதமாகி உள்ளது. அந்த வழியாக இரவில் செல்வோர் தவறி கால்வாயில் விழும் அச்சம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் மீது சேதமான சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு வேறு சிமெண்டு சிலாப் மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசீலன், தொரப்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:45 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#45163

அந்தரத்தில் தொங்கும் கம்பம்

அந்தரத்தில் தொங்கும் கம்பம்மின்சாரம்

வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டு பெரியபேட்டை அருணாச்சல முதலியார் தெருவில் இரும்பு மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி உடைந்து அந்தரத்தில் ெதாங்குகிறது. அதன் மேலே செல்லும் மின்கம்பிகள் வீடுகளுக்கு முன்னால் தாழ்வாக மேலே செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45161

குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

குப்பை

திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் எதிரில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை முறையாக அள்ளுவார்களா? -ஆறுமுகம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick