Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 March 2024 5:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45660

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதி அருகே சிமெண்டு சாலையில் பள்ளம் உள்ளது. அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர். விபத்து ஏற்படாமல் இருக்க பள்ளத்தின் மேல் முறிந்த மரக்கிளையை அடையாளமாக வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:06 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45659

மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லை

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக்பண்ணை, தெங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தை காரை, தெங்கால், விஷாரம், வேலூர் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45656

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாலாஜா-அம்மூர் சாலையில் மேல்புதுப்பேட்டை வரை ஒரு ஆண்டாக இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. அந்த வழியாக இரவில் செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் மின்விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுப்பிரமணியம், அம்மூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#45653

பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பால பணி

சாலை

ஆற்காட்டில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும்போது, விபத்துகள் நடக்கின்றன. ஆகையால், 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்தது. பணிகள் தொடங்கிய சில மாதங்களிலேயே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு முடிவடையாமல் உள்ளது. நிறுத்தப்பட்ட மேம்பால பணியை தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -செல்வகுமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:57 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45651

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?

மற்றவை

அரக்கோணத்தில் சோளிங்கர் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் உள்ளது. அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராஜன்பாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:54 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45646

பழுதடைந்த ஒளிரும் மின் விளக்குகள்

பழுதடைந்த ஒளிரும் மின் விளக்குகள்மின்சாரம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கடந்த சில நாட்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் வளைவான பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மயில்வாகனன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45642

சாலை பழுது

சாலை

திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து அனேரி செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. அந்தச் சாலையில் ெசல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், அனேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45640

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாரதிராஜா, கதிரிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45639

ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள்

ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள்குப்பை

திருப்பத்தூர் அருகே திம்மணம்புதூர் பகுதியில் ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள் உள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்ற இடங்களில் குப்பைக்கொட்டுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து குப்பைகளை முறையாக சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடராஜன், திம்மணம்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45638

குடிநீர் தொட்டிகள் பழுது

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே சவுடேபள்ளியில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில முழுவதும் சேதமாகியும், மற்றவை சரியான பராமரிப்பு இன்றியும் உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டிகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பெரியசாமி, சவுடேபள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:39 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#45637

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை

மற்றவை

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையையொட்டி பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்தப் பயணிகள் நிழற்குடை அருகில் தேவையற்ற கருங்கற்கள், மரக்கழிவுகள் கிடக்கின்றன. இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டி.சீனுவாசன், கீழ்பென்னாத்தூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:31 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45635

தண்ணீர் பந்தல்கள் திறக்க வேண்டும்

தண்ணீர்

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் அனல் காற்று வீசுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -கண்ணன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick