Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 April 2024 3:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45967

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

திருப்பத்தூர் ஈத்கா ரோட்டில் ஏராளமான கடைகளும், வீடுகளும் உள்ளன. இங்குள்ள சாலையில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்களும், கடை வியாபாரிகளும் குப்பைகளை சாலையோரம் வீசுகிறார்கள். அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைத்து முறையாக சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வீரமணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45966

சாய்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டி

சாய்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டிகுப்பை

திருப்பத்தூர் அருகே சுருட்டையன் வட்டம் பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்று சாலையோரம் சாய்ந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி எரிக்கின்றனர். குப்ைபத்தொட்டிைய நேராக வைத்து குப்பைகளை சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூமிநாதன், சுருட்டையன் வட்டம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:15 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45963

சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

சாலை

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், திருத்தணி, திருவள்ளூர், சோளிங்கர் மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளின் நடுேவ இருக்கும் தடுப்புச்சுவர் முற்றிலும் தெரியாத வகையில் சேதம் அடைந்துள்ளது. இதனால் இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் பிரதிபலிப்பான் விளக்குகளை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகனவேல், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:11 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45962

ஏரிக்கரை சாலை சேதம்

ஏரிக்கரை சாலை சேதம்சாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமம் ஏரிக்கரை தார் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சேதம் அடைந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தீனா, புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:08 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45961

பயணிகள் நிழற்கூட வசதி தேவை

மற்றவை

நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் வழியாக காஞ்சீபுரம்-அரக்கோணம் செல்லும் சாலை செல்கிறது. சேந்தமங்கலத்தில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வேலை, கல்வி, வியாபாரம், சொந்த வேலை என பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் சென்று வருகின்றனர். சேந்தமங்கலத்தில் பஸ் பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. மக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணியோடு சேர்த்து பயணிகள் நிழற்கூட வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45960

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜா நகரில் முக்கிய சாலைகளாக சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை, வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாலாஜா-சோளிங்கர் சாலை ஆகியவைகள் உள்ளன. அந்தச் சாலைகளில் தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். அந்தச் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. அந்த மாடுகளால் விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை வாலாஜா நகராட்சி அதிகாரிகள் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -செல்வம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:03 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45958

சுத்தமில்லாத சுகாதார வளாகம்

மற்றவை

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள இலவச சுகாதார வளாகம் சுத்தமில்லாமல் பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுகாதார வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முன்வர வேண்டும். -புகழ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:01 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45956

கார் பார்க்கிங் ஏற்படுத்த வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலையில் நடக்கும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமி விழாவும் ஒன்றாகும். இந்த விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். அதில் பெரும்பாலான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகிறார்கள். அவர்கள் தங்களின் கார்கள், வேன்களை திருவண்ணாமலையில் பார்க்கிங் செய்ய போதிய வசதி இல்லாததால் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 2:58 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#45955

தண்ணீர் தொட்டியின் மின்மோட்டார் பழுது

தண்ணீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதுமின்சாரம்

வேட்டவலத்தை அடுத்த ஆவூர் அண்ணா நகர் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்ேமாட்டார் பழுதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுலைமான், ஆவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 2:56 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#45954

மின்கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும்

மின்கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும்மின்சாரம்

வந்தவாசி அருகே சோரப்புத்தூர் கிராமத்தில் சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த இடத்தில் இரு வாகனங்கள் எதிர் எதிரே மாறி செல்லும்போது, கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம், மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பத்தை சாலையோரம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சக்திவேல், பொன்னூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 2:54 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45953

சமையலறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

சமையலறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது வேளையாம்பாக்கம் கிராமம். அங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் ரூ.8 லட்சத்தில் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மற்றொரு இடத்தில் இருக்கும் பள்ளி கட்டிடத்தில் சமையல் செய்து இப்பள்ளிக்கு கொண்டு வந்து வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தக் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -சிவா, வேளையாம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 2:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45951

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்கழிவுநீர்

வேலூர் சாய்நாதபுரம் வள்ளலார் நகர் மெயின்ரோடு பகுதியில் மழை நீரை வடிய வைக்க கால்வாய் மேல் மூடியை சேதப்படுத்தி, மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கால்வாய் மேல் மூடியை இன்னும் சீரமைக்கவில்லை. அந்தக் கால்வாயை கடக்க மக்கள் சிரமப்படுகிறார்கள். கால்வாயால் விபத்துகள் நடக்கின்றன. எனவே கால்வாய்க்கு மூடி போட்டு, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வி.என்.தனசேகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick