Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 April 2024 4:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46180

சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்

சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்மற்றவை

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடைபாதை ஓரம் டெலிபோன் கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விடலாம். சாய்ந்த கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எழிலரசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46179

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பிகள்

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பிகள்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மசூதி அருகே மின் கம்பங்கள் உள்ளன. அந்த மின் கம்பங்களின் வழியாக செல்லும் கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. அந்த வழியாக மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. அந்த மின் கம்பிகளில் படர்ந்துள்ள செடி, கொடிகளை மின்வாரியத்துறை ஊழியர்கள் அகற்ற வேண்டும். -ஏகாம்பரம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46178

ஆபத்தான நிலையில் மின்சாதன பெட்டி

ஆபத்தான நிலையில் மின்சாதன பெட்டிமின்சாரம்

வேலூர் அருகே முள்ளிப்பாளையத்தில் இருந்து திடீர்நகர் செல்லும் வழியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் உள்ள மின்சாதன பெட்டி உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. மின்சார பெட்டிைய பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சஞ்சீவி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46177

குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம்

குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம்தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெரு, வேளாளர் தெருக்களில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அர்ஷத்பாஷா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46176

இரும்புத்தடுப்புகள் அமைக்க வேண்டும்

இரும்புத்தடுப்புகள் அமைக்க வேண்டும்சாலை

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றை கடந்து செல்ல தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தின் இரு பக்கமும் 2½ அடி உயரத்துக்கு சிமெண்டு தடுப்புகள் உள்ளன. அந்தச் சிமெண்டு தடுப்புகள் சற்று தூரத்தில் உள்ளன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்போது திடீரெனப் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலாற்றின் இருபக்கமும் இரும்புத் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுப்பிரமணியம், விரிஞ்சிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46175

மதுப்பிரியர்களால் பயணிகள் அவதி

மதுப்பிரியர்களால் பயணிகள் அவதிமற்றவை

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் மதுப்பிரியர்கள் போதையில் படுத்து உறங்குகின்றனர். இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. மதுப்பிரியர்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? -அண்ணாதுரை, இமானுவேல்நகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46174

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருப்பத்தூர் நகராட்சி 6-வது வார்டு நடுத்தெருவில் சாலையோரம் மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை மாடுகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மொஹிதீன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46173

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் கோட்டை ஈத்கா மசூதியின் சுற்றுச்சுவர் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேற்கண்ட இடத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்றுவார்களா? -ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46172

ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்ட முடியாமல் சாலையோரம் வீசி செல்கிறார்கள். ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை மற்ற இடங்களில் பகிர்ந்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், அச்சமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46169

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே சுருட்டையன் வட்டம் பகுதியில் குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்தக் குடிநீர் தொட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளதால், அந்தப் பகுதி பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரிதா, சுருட்டையன் வட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46167

நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே காந்திபுரத்தில் குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அந்தக் குப்பைகளை அள்ளாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டி அருகே கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:31 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46165

மேம்பால சுவரில் வளர்ந்த செடிகள்

மேம்பால சுவரில் வளர்ந்த செடிகள்சாலை

காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைப்பெரும்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மேம்பாலப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பணிகள் முடியும் முன்பே மேம்பால சுவரில், ஒருசில இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், சுவரில் விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வன், துரைப்பெரும்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick