சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2022-07-23 15:00 GMT

சாலையில் வீணாகும் குடிநீர்

திருப்பூர் ராயபுரத்தில் இருந்து சூசையாபுரம் செல்லும் ரோட்டின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் ரோட்டில் குடிநீர் கசிந்து ெகாண்டிருக்கிறது. நாள் முழுவதும் குடிநீர் பாய்ந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் ரோட்டோரத்தில் உள்ள குப்பை தொட்டியிலிருந்து கசியும் கழிவு நீரும் இதனுடன் சேர்ந்து ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துர்கா,ராயபுரம்.௯௮௪௧௨ 85733

மேலும் செய்திகள்