வீணாகும் குடிநீர்

Update: 2024-10-13 11:43 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியின் கரையில் குடிநீர் வாரியம் சார்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு மின் மோட்டார் மூலம் ஆலத்துடையான் பட்டி, கல்லாங்குத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக ஆளத்துடையான்பட்டி ஊராட்சி பகுதிக்கு இத்தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் இயங்கும்போது தண்ணீர் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீரை வீணாக்காமல் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்