திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவு செய்யும் இடத்தின் அருகே குடிநீர் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இல்லாமல், சுகாதாரமில்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தி்ற்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.