குளம்போல் தேங்கிய மழை நீர்
திருப்பூரில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த நிலையில் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலத்தின் அருகே ரோட்டோரத்தில் தேங்கிய மழை நீர் இன்னமும் வடியாமல் உள்ளது. இங்கு ரோட்டை ஆக்கிரமித்தபடி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் இவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதேபோல் பாதசாரிகள் இந்த பகுதியில் நடந்து செல்வதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை லாரி மூலம் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ைடசன்,ராயபுரம்.
9841749152