குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
பல்லடம்-சங்கரலிங்கனார் வீதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வினியோகம் செய்யும் போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த நிலை ஒரு வருடமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் பள்ளமான இடங்களில் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ராஜா, பல்லடம்.
9629032328