வீணாகும் குடிநீர்
திருப்பூர் ராயபுரம் 37-வது வார்டு சின்னா நகர் முதல் வீதியில் புதியதாக தார்ச்சாலை போடப்பட்டது. இந்த பணியின் போது அந்த இடத்தில் ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய் உடைந்து 15 நாட்களுக்கு மேலாக குடி நீர் வீணாகி சாலையில்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதை சரி செய்ய உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ் ராயபுரம், 96007 01794