குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-04 10:14 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கலக்குடி கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக குடிநீர் குழாயை சுற்றியுள்ள சிமெண்டு தளம் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும், குழாய்கள் அருகே செடி,கொடிகள் வளர்ந்து குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதுமட்டுமின்றி குழாய்களில் முறையாக குடிநீரும் வருவதில்லை. இதன்காணரமாக அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்