பொதுமக்கள் அவதி
திருப்பூர் பல்லடம் மெயின் ரோட்டில் தென்னம் பாளையம் பகுதியில் தினசரி மார்க்கெட் செயலபட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தி்ன் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக தினமும், ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் மார்க்கெட் பகுதி குண்டும் குழியுமாக உள்ளதாலும் வடிகால் வசதி இல்லாததாலும் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர்தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் காணப்படுவதால் பலரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
லோகநாதன், திருப்பூர், .96594 55289
------