ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு ஏரலுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சின் கடைசி இருக்கைக்கு முன்புள்ள ஜன்னல் கண்ணாடி பெயர்ந்ததால் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். பஸ் செல்லும்போது கண்ணாடி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். எனவே புதிய பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.