சேலத்தில் இருந்து அரூர் வழியாக வேலூர், வனவாசி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, இரவு நேரங்களில் அரூர் வழியாக செல்லும் அரசு பஸ்களில் அரூர் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை. பயணிகளை ஏற்றினாலும் அரூர் பஸ் நிலையம் வராமல் கச்சேரி மேட்டில் இறக்கிவிட்டு பைபாஸ் சாலை வழியாக பஸ்கள் செல்கின்றன. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே அரூர் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.