ஆபத்தான குழி
திருப்பூர் காலேஜ் ரோடு திரு.வி.க. நகர் கே.இ.ஆர். லே-அவுட் பகுதி சாலையில் சாக்கடை பாலத்தில் ஆபத்தான குழி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். குழி இருப்பதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் நிைல உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-குமார், திருப்பூர்.