கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தென்றல் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்தும், சிமெண்டு சாலை சிதிலமடைந்தும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் நடந்து செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தரமான சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், பர்கூர்.